Automobile Tamilan

மெர்சிடிஸ்-பென்ஸ் முதல் எலக்ட்ரிக் டிரக் அறிமுகம்

முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் எலக்ட்ரிக் டிரக் மாடலை டெய்ம்லர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் மின்சார டிரக்கின் பெயர் மெர்சிடிஸ் பென்ஸ் அர்பன் இடிரக் ஆகும். சுற்றுசூழலுக்கு ஏற்ற எலக்ட்ரிக் டிரக் மாடலாக விளங்கும்.

26 டன் வரை உள்ள எடை பிரிவில் வெளியிடப்பட்டுள்ள அர்பன் இ டிரக்  ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை பயணிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடிரக்கில் இடம்பெற்றுள்ள 212-kWh  3 நவீன லித்தியம் ஐயன் பேட்டரி ஆற்றலை பின்புற சக்கரங்களுக்கு கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மல்டி ஆக்சில் கொண்டுள்ள டிரக்கில் உள்ள பேட்டரிக்கு விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டீசல் இஞ்ஜின் டிரக்குகளுக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டிரக்கில் எடை தாங்கும் திறன் மற்றும் இழுவைதிறன்களும் ஐசி இஞ்ஜின் டிரக்குகளுக்கு இனையான வகையில் இருக்கும்.

அடுத்த சில வருடங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் வகையில் மேம்டுத்தவும் சிறப்பான எடை தாங்கும் திறனை கொண்ட அர்பன் இ-டிரக் நகரங்களுக்கு இடையிலான தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும்.

சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனங்களை உற்பத்தி செய்வதில் அனைத்து வாகன தயாரிப்பாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய சந்தையிலும் எலக்ட்ரிக் கார்களுக்கான விற்பனை அதிகரித்து வருகின்றது. மேலும் பல புதிய எலக்ட்ரிக் கார் மாடல்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் களமிறங்க உள்ளது.  அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளுக்குள் முழுமையாக எலக்ட்ரிக் மையத்துக்கு உலகம் தயாராக உள்ளது.

Exit mobile version