Automobile Tamilan

கேடிஎம் 160 Duke, RC 160 விற்பனைக்கு அறிமுகம் எப்பொழுது..?

2024 ktm 200 duke tft cluster

கேடிஎம் நிறுவனத்தின் ஆரம்ப நிலை மாடலாக உள்ள 125சிசி எஞ்சின் பெற்ற 125 டியூக், ஆர்சி 125 என இரு மாடலுக்கு மாற்றாக 160cc எஞ்சின் பெற உள்ள 160 டியூக், மற்றும் ஃபேரிங் ரக ஆர்சி 160 என இரண்டும் விற்பனைக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனையில் உள்ள 200cc கேடிஎம் பைக்குகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ள புதிய 160சிசி எஞ்சின் அதிகபட்சமாக 18hp பவரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் மோனோஷாக் உடன் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கலாம்.

எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிக கடுமையான போட்டிகள் நிறைந்த 160cc சந்தைக்குள் நுழைவதுடன் குறிப்பாக யமஹாவின் லிக்யூடு கூல்டு 155cc எஞ்சின் பெற்றுள்ள MT-15, R-15 V4 என இரண்டுக்கும் நேரடி சவாலினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது விற்பனையில் உள்ள 125 டியூக் மாடல் விலை ரூ.1.81 லட்சமாக கிடைப்பதனால் இதற்கு மாற்றாக வரவுள்ள 160சிசி எஞ்சின் பெற்ற மாடலும் ரூ.1.90 லட்சத்துக்குள் அமையலாம்.

source

Exit mobile version