Automobile Tamil

ஆச்சிரியத்தில் ஆழ்த்தும் டெஸ்லா பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!

ஆட்டோமொபைல் சந்தையில் பரபரப்பாக பேசப்படுகின்ற நிறுவனங்களில் ஒன்று மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா ஆகும். டெஸ்லா தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் செயல்பட்டு வருகின்றார், அதிகம் இந்நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்களை இங்கே காணலாம்.

டெஸ்லா மோட்டார்ஸ்

டெஸ்லா ரோட்ஸ்டெர்

2008 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டெஸ்லா ரோட்ஸ்டெர் அதிகபட்சமாக ஒரு முழுமையான சிங்கிள் சார்ஜ் சமயத்தில் 320 கிமீ பயணிக்கும் திறன்கொண்டாக விளங்குகின்ற முதல் லித்தியம்ஐன் பேட்டரி பெற்ற மாடலாகும். அமெரிக்காவில் மட்டும் 1800 க்கு மேற்பட்ட ரோட்ஸ்டெர் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், டாப் கியர் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டிருந்த மாடல்கள் மிக குறைவான கிமீ பயணிப்பதாக தவறாக சித்தரித்ததாக டெஸ்லா பிபிசி டாப் கியர் கிளார்க்சன் மீது வழக்கு தொடர்ந்தது, ஆனால் வழக்கின் முடிவில் டாப் கியிரே வென்றது.

சரித்திரத்தை மாற்றிய மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ்

மாடல் S மற்றும் மாடல் X என இரு மாடல்களும் எலக்ட்ரிக் கார்கள் மீதான மோகத்தை அதிகரிக்கவும், டெஸ்லா நிறுவனத்துக்கு மிகப்பெரிய அளவில் வருவாயை பெற்று தருகின்ற மாடல்களாகும். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இந்த மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

எந்த மின்சார கார்களும் பெற்றிராத அதிகபட்ச எடையை பெற்றுள்ள மாடல் எக்ஸ் மொத்த எடை 2,276 கிலோஆகும். மேலும் மாடல் எக்ஸ் பாதுகாப்பிலும் மிக கட்டுறுதியான அமைப்பை கொண்டதாக அறியப்படுகின்றது.

மாடல் 3 

அடுத்த சில வாரங்களில் டெலிவரி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற மாடல் 3 டெஸ்லா வரலாற்றிலும் மீண்டும் ஒரு மாபெரும் புரட்சியை மின்சார கார் துறையில் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சில வரி சுவாரஸ்யங்கள்

அமெரிக்காவில் எந்த நிறுவனத்துக்கும் வழங்கப்படாத கடனாக அதிகபட்சமாக டெஸ்லாவுக்கு அமெரிக்கா $ 465 மில்லியன் கடனை 2009 ஆம் ஆண்டில் வழங்கியது.இந்த கடனுக்கு மிக குறைந்த வட்டியுடன் 9 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

மாடல் எக்ஸ் எஸ்யூவி 400 கிமீ ஒரே சார்ஜில் பயணிக்கும் திறன் கொண்டதாகும், ஒரு முழுமையான சார்ஜ் செய்ய அமெரிக்கர்கள் $13.44 அதாவது இந்திய ரூபாய் ரூ.860 மட்டுமே செலவிடுகிறார்கள்.

மாடல் எஸ் எனும் மற்றொரு எலக்ட்ரிக் மாடலின் 90டி வேரியன்ட் அதிகபட்சமாக ஒரே சார்ஜில் 742 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாகும்.

அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் 52 டீலர்களை பெற்றுள்ள டெஸ்லாவின் டீலர் எண்ணிக்கை ஜிஎம் மற்றும் செவர்லே டீலர்களுக்கு இணையானதாகும்.

உலகின் மிகப்பெரிய இரண்டாவது கட்டிடமாக உருவாகி வருகின்ற டெஸ்லாவின் பேட்டரிகளை தயாரிக்க கட்டப்படுகின்ற ஜிகாஃபேக்டரியில் ஆண்டிற்கு 5 லட்சம் பேட்டரிகள் தயாரிக்கப்பட உள்ளதால் பேட்டரி தயாரிப்பு விலை 30 சதவிகிதம் குறையலாம் என கருதப்படுகின்றது.

எலான் மஸ்க் டெஸ்லாவில் $ 70 மில்லியன் வரை சொந்தமாகவே முதலீடு செய்துள்ளார்.

மாடல் எஸ் காரில் அதிகபட்சமாக மாற்ற வேண்டியது 6 பொருட்களை மட்டுமே அது என்ன தெரியுமா 4 டயர்கள் இரண்டு வைப்பர் பிளேடுகள் மட்டுமே ஆகும்.

மாடல் Y என்ற எஸ்யூவி காரை 2019 ஆம் ஆண்டில் வெளியிடலாம். இந்த மாடலில் சைட் மிரர் இருக்க வாய்ப்பில்லை.

டெஸ்லாவில் இடம்பெற்றுள்ள ஆட்டோபைலட் மோட் தானியங்கி முறையில் கார் இயங்க உதவுகின்றது.

சுமான் எனப்படும் டெஸ்லாவின் மற்றொரு நுட்பம் உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் காரை தானாகவே இயக்கி நீங்கள் இருக்கும் இடத்திற்கு வரவழைக்க இயலும்.

Exit mobile version