வணக்கம் தமிழ் உறவுகளே…

போர்ஷே நிறுவனம் தன்னுடைய 100வது காரினை இந்தியாவில் விற்றுள்ளது. இந்த காரினை பெற்றவர் நடிகை ஶ்ரீதேவி ஆவார். இந்த காரில் என்ன சிறப்பு என்பதை பார்போம்.
இந்த காரின் பெயர் போர்ஷே கேயேன்(PORSHCE CAYENEE)
sridevi

 போர்ஷே கேயேன்மிகச்சிறப்பான ஸ்போர்ட்ஸ் டீசல் SUV (sports utility vehicle) காராகும். சிறப்பான மைலேஜ் மற்றும் ஸ்போர்டிவான கார்தான்  ப்ரோஸ்ச் கேய்னி. இந்த காரில் 3.0 லிட்டர் V6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜின் சக்தி 240 குதிரை திறன் கொண்டதாகும். 0-100km வேகத்தை தொட 7.8 நொடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். 8 ஸ்பீட் S ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் ஆட்டோ ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி உள்ளது.
அதிகபட்ச வேகம் 218km/hr

இந்த காரினை நடிகை ஶ்ரீதேவி தன் கணவரான போனி கப்பூர்க்கு பரிசாக தந்துள்ளார்.
இதுபற்றி போர்ஷே நிறுவனத்தின் இந்தியாவின் விற்பனை பிரிவு அதிகாரி அனில் ரெட்டி கூறுகையில்
இந்தியாவில் மிகச்சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.அதிலும் 100வது காரினை நடிகை ஶ்ரீதேவி  பெற்றது மகிழ்ச்சி அளக்கிறது. மேலும் போர்ஷே எதிர்காலம் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.
விலை: 64.99 லட்சம் முதல் 1.28 கோடி வரை ஆகும்.