நானோ காரை கைவிடுமா ? – டாடா மோட்டார்ஸ்

0
நானோ கார் உலகின் மிக குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் என்ற பெருமைக்குரிய நானோ கார் விற்பனையில் வரவேற்பினை பெறாத காரணத்தால் டாடா  மோட்டார்ஸ் க்கு மிகுந்த இழப்பினை ஏற்படுத்தி வருகின்றது.

நானோ கார்

பல்வேறு விதமான தடைகளை தாண்டி நானோ காரை டாடா உற்பத்தி செய்ய தொடங்கியது. நானோ கார் உற்பத்திக்கு தொடங்கப்பட்ட முதல் ஆலையை மேற்கு வங்கத்தில் தொடங்கிய டாடா கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் குஜராத் மாநிலத்திற்கு முழுமையாக மாற்றி கட்டமைத்தது.

‘ மலிவான கார்  ‘ என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்பட்ட காரணத்தால் மலிவான கார் (cheapest car) முத்திரையால் வாடிக்கையாளர்கள் மலிவான கார்களை விரும்பமாட்டார்கள் என டாடா  உணர்ந்து உள்ளது.

Google News

விற்பனையில் எதிர்பார்த்த இலக்கினை விட படு மோசமான விற்பனையில் சிக்கி தவித்து வரும் நானோவால் புதிய சனந்த ஆலை முழுமையான உற்பத்தினை எட்டாமல் முடங்கி கிடப்பதனால் நானோ காரின் புதிய காரினை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.

நானோ காரில் ஆட்டோமெட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) பொருத்தி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. மேலும் பல்வேறு புதிய வசதிகளை இணைத்து நானோ காரில் மேலும் சில புதிய வேரியண்ட்களை அறிமுகம் செய்ய உள்ளது.

ஏஎம்டி பொருத்தப்பட்டால் நெரிசல் மிகுந்த நகரங்களில் நானோ காரை மிக எளிதாக இயக்க முடியும்.
பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளதால் நானோ காரின் தரம் மற்றும் விலை உயரும்.

டாடா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை சரிந்து வந்த நிலையில் அறிமுகம் செய்ப்பட்ட ஜெஸ்ட் மற்றும் போல்ட் கார்கள் மிகுந்த வரவேற்ப்பினை பெற்றுள்ளதால் உற்சாகத்துடன்  மீண்டும் நானோ காரை புதுப்பித்து புதிய தொடக்கத்தினை தரவுள்ளது.

ரத்தன் டாடா அவர்களின் கனவு காரான நானோவை எக்காரணம் கொண்டும் டாடா மோட்டார்ஸ் கைவிட வாய்ப்பில்லை.

ஆதாரம் ; ET auto