பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. எவ்வளவு ?

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்துக்கு ஏற்ப விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வினால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டது. டீசல் லிட்டருக்கு 44 பைசா வரை உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 பைசாவும், டீசல், லிட்டருக்கு 44 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு விளக்கமளித்துள்ள எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளன.  . இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் 01/05/2017 முதல் அமலுக்கு வந்துள்ளது. உயர்த்தப்பட்ட விலை உயர்வை தொடர்ந்து, சென்னையில் 71 ரூபாய் 16 காசாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தற்போது 71 ரூபாய் 17 காசாக அதிகரித்துள்ளது.

60 ரூபாய் 16 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசல், தற்போது 60 ரூபாய் 71 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இது தவிர புதுச்சேரி உள்பட 5 நகரங்களில் தினசரி மாறும் வகையிலான பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.

Exit mobile version