பியாஜியோ வர்த்தக பிரிவில் வெளியிடப்பட்டுள்ள மூன்று சக்கர எலக்ட்ரி்க் ஆட்டோ அபே e-சிட்டி அல்டரா விலை ரூ.3.88 லட்சம் மற்றும் அபே e-சிட்டி FX மேக்ஸ் மாடலின் விலை ரூ.3.30 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Piaggio Apé E-City Ultra
நகரப்புற பயணங்களுக்கு ஏற்ற வகையிலான பல்வேறு சிறப்புகளை பெற்ற பியாஜியோ அபே இ-சிட்டி அல்ட்ரா ஆட்டோவில் 10.2 kWh LFP பேட்டரி பேக்கினை பெற்று முழுமையான சார்ஜில் 236 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் பெற்றுள்ளது.
மணிக்கு 55 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் பவர் 9.55 kW மற்றும் 45 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 28 % கோணத்தில் ஏறும் திறனுடன் கிளைம்ப் அசிஸ்ட் மோடு முழுமையான மெட்டல் பாடி கொண்டுள்ள இந்த ஆட்டோரிக்ஷாவில் பேட்டரி இருப்பு, ரேஞ்ச், வேகம் மற்றும் எச்சரிக்கைகள் என பலவற்றுடன் 4G டெலிமாடிக்ஸ் கொண்ட டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உள்ளது.
3 kW விரைவு சார்ஜரை பெற்று ஐந்து ஆண்டுகள் அல்லது 2,25,000 கிமீ உத்தரவாதம் வழங்குவதை பியாஜியோ உறுதிப்படுத்தியுள்ளது.
Piaggio Apé E-City FX Maxx
மணிக்கு 49 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் பவர் 7.5 kW மற்றும் 30 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 19 % கோணத்தில் ஏறும் திறனுடன் உள்ள பியாஜியோவின் அபே இ-சிட்டி எஃப்எக்ஸ் மேக்ஸில் 8 kWh LFP பேட்டரி பேக்கினை பெற்று முழுமையான சார்ஜில் 176 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் பெற்றுள்ளது.
3 kW விரைவு சார்ஜரை பெற்று ஐந்து ஆண்டுகள் அல்லது 2,25,000 கிமீ உத்தரவாதம் வழங்குவதை பியாஜியோ உறுதிப்படுத்தியுள்ளது.
இரு மாடல்களுக்கு முன்பதிவு நாடு முழுவதும் உள்ள பியாஜியோ டீலர்கள் மூலம் துவங்கப்பட்டுள்ளது.