Site icon Automobile Tamilan

ரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது

இந்தியா ரெனோ நிறுவனம், மாறி வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அன்னிய செலவானி மாற்றத்தால் 1.5 % வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரெனோ நிறுவனம் க்விட், டஸ்ட்டர், கேப்டூர் மற்றும் லாட்ஜி உள்ளிட்ட மாடல்களின் விலையை மாறி வரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப அதிகரித்து வரும் உற்பத்தி செலவினங்கள் , 
உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அன்னிய செலவானி  அதிகரிப்பால் விலை உயர்வை தவிர்க்க இயலவில்லை என இந்நிறுவன செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் மாருதி, டாடா மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ, நிசான் மற்றும் ரெனோ உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.

Exit mobile version