Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

3.89 லட்சம் ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கும் சுசூகி

by Automobile Tamilan Team
26 July 2024, 6:29 pm
in Auto News
0
ShareTweetSend

suzuki access 125 dual tone left side

சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஆக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மற்றும் அவெனிஸ் 125 என மூன்று ஸ்கூட்டர்களிலும் ஏற்படுகின்ற ஸ்டார்டிங் கோளாறு, வேக சென்சார் மற்றும் திராட்டிள் சென்சாரில் ஏற்படும் கோளாறினை சரி செய்வதற்கு திரும்ப அழைக்கப்படுகிறது.

Suzuki Recall

ரீகால் தொடர்பான அறிவிப்பில் ஏப்ரல் 30, 2022 முதல் டிசம்பர் 3, 2022 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களைப் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஸ்டார்டிங் செய்வதற்கான Ignition coilல் நிறுவப்பட்டுள்ள ஒரு தவறான உயர் அழுத்த கார்டு (High Tension Cord) காரணமாக இந்த சிக்கல் ஏற்படுகிறது. சுஸுகி இந்த சிக்கலை விவரிக்கிறது, “வரைதல் தேவைகளை பூர்த்தி செய்யாத High Tension Cord (NG) Ignition Coil நிறுவப்பட்டதால், இயங்கும் போது இயந்திர உராய்வு காரணமாக மீண்டும் மீண்டும் வளைந்ததால் உயர் அழுத்த கார்டில் விரிசல் மற்றும் உடைப்பு ஏற்படுத்தும். இதன் விளைவாக என்ஜின் ஸ்டால் மற்றும் ஸ்டார்டிங் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், விரிசல் ஏற்பட்ட ஹை டென்ஷன் கார்டு தண்ணீரில் படும் போது, வாகனத்தின் வேக சென்சார் மற்றும் த்ரோட்டில் பொசிஷன் சென்சார் ஆகியவை சேதமடைந்தால் இதன் விளைவாக ஸ்பீடு டிஸ்பிளேவில் தெரியாமல் சிக்கலை ஏற்படுத்துகின்றது.
இது போன்ற பிரச்சினைகளை சரி செய்வதற்காகவே திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

சுசூகி வெளியிட்ட அறிக்கையில் பாதிப்படைந்த யூனிட்களின் எண்ணிக்கையில் ஆக்செஸ் 125 மாடல் 2,63,788, அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் எண்ணிக்கை 52,578 மற்றும் பர்க்மேன் 125 மாடல் 72,025 பட்டியலிட்டுள்ளது.  முன்னெச்சரிக்கையாக, பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் தங்கள் அருகிலுள்ள சர்வீஸ் மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

இதுமட்டுமல்ல சர்வதேச அளவில் சுசூகி மே 5, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரை தயாரிக்கப்பட்ட V-STROM 800DE மாடலில் பின்புற டயரில் ஏற்பட்டுள்ள வெடிப்பு பிரச்சனைக்காக இந்திய அளவில் 67 யூனிட்டுகளை திரும்ப அழைத்துள்ளது.

Related Motor News

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி., சுசூகி ஸ்கூட்டர்கள், பைக்குகள் விலை குறைப்பு

புதிய நிறத்தில் அவெனிஸ் 125 ஸ்கூட்டரை வெளியிட்ட சுசூகி

ஸ்கூட்டர் சந்தையில் சரிவை சந்திக்கும் ஹோண்டா., வளர்ச்சி பாதையில் டிவிஎஸ்.!

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

2025 ஆக்சஸ் ஸ்கூட்டரில் ரைட் கனெக்ட் TFT எடிசன் வெளியானது

சுசூகி ஆக்சஸ் 125 Vs ஹீரோ டெஸ்டினி 125 – எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..!

Tags: Suzuki Access 125Suzuki AvenisSuzuki Burgman
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் ஸ்பீடு T4

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

Ather Energy

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan