செப்டம்பர் 1993ல் அறிமுகம் செய்யப்பட்ட சுசூகி வேகன்ஆர் தற்பொழுது இந்தியா, ஜப்பான் உட்பட சுமார் 75 நாடுகளில் 10 மில்லியன் விற்பனை இலக்கை 31 ஆண்டுகள் 9 மாதங்களில் கடந்துள்ளது. இந்திய சந்தையில் 1999 ஆம் ஆண்டு முதன்முறையாக வேகன்ஆரினை விற்பனைக்கு வெளியிட்டது.
தற்பொழுது வேகன்ஆரினை ஜப்பான், இந்தியா, ஹங்கேரி மற்றும் சில நாடுகளில் தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், நாடுகளுக்கு ஏற்ப மாறுபட்ட சில அம்சங்ளை பெற்றுள்ளது.
குறிப்பாக, இந்திய சந்தைக்கான மாருதி சுசூகி வேகன்ஆர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் கிடைக்கின்றது.
சர்வதேச சுசூகி நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், வேகன் ஆர் பயன்படுத்தும் பல வாடிக்கையாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மினி வேகன் முறையில் புதுமை மற்றும் உயர் நடைமுறைத்தன்மைக்காக வேகன்ஆர் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, மினிகார்களுக்கும் முன்னணி மாடல்களில் ஒன்றாக மாறியது. விற்பனைப் பகுதியில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை சுசூகி தொடர்ந்து உருவாக்கும் மற்றும் தினசரி போக்குவரத்தை ஆதரிக்க ஒன்றாக தொடர்ந்து செயல்படும், என குறிப்பிட்டார்.