Automobile Tamil

டாடா அல்ட்ரோஸ் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45x கான்செப்ட்டை அடிப்படையாக கொண்ட அல்ட்ரோஸ் (Altroz) காரினை ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முறையாக உற்பத்தி நிலை மாடலாக காட்சிப்படுத்தியுள்ளது. 89வது ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் மின்சாரத்தில் இயங்கும் அல்ட்ரோஸ் EV மாடலும் வெளியிடப்படுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹார்ன்பில் என குறிப்பிடப்பட்ட H2X மினி ரக எஸ்யூவி, 7 இருக்கைகளை பெற்ற பஸார்டு எஸ்யூவி ஆகியவற்றை 21வது ஆண்டாக ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் பங்கேற்றதை கொண்டாடி வருகின்று.

டாடா அல்ட்ரோஸ் காரின் சிறப்புகள்

பெட்ரோல் , டீசல் போன்றவற்றை அடிப்படையாகவும், அடுத்து வரவுள்ள எலக்ட்ரிக் கொண்டு இயங்கும் வகையிலும் ஆல்ட்ரோஸ் கார் விற்பனைக்கு வரவுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக 45X என காட்சிப்படுத்தப்பட்ட இந்த பிரிமியம் ரக ஹேட்ச்பேக் மாடல் தற்போது உற்பத்தி நிலையை எட்டியுள்ளது.

மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட உலக கார் ரசிகர்களை கவர்ந்த டாடா ஹாரியர் வடிவமைப்பு மொழியான இம்பேக்ட் டிசைன் 2.0 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது மாடலாக அல்ட்ரோஸ் விளங்குகின்றது. இந்த காரில் டாடாவின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் மிக நேர்த்தியான தோற்ற பொலிவு இளைய தலைமுறையினருக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

பக்கவாட்டில் உள்ள மிக அழகான வடிவத்தை வெளிப்படுத்த வழங்கப்பட்டுள்ள லைன்கள் சிறப்பாகவும், ரியர் டெயில் லைட் மற்றும் பம்பர் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. இந்த காருக்கான மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்க்க காரணமாக அமைந்துள்ளது.

டாடாவின் ஆல்ஃபா பிளாட்பாரத்தில் (Tata’s ALFA architecture) வடிவமைக்கப்பட்டிருக்கின்ற இந்த பிளாட்ஃபாரம் பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு ஏற்றதாகவும், செடான் , எஸ்யூவி போன்ற மாற்று ரக மாடல்களையும் உருவாக்க இயலும். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என மூன்று வகையிலும், கூடுதலாக எலக்ட்ரிக் அம்சத்தை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது.

ஆல்ட்ரோஸ் காருக்கு போட்டியாக மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற கார்கள் விளங்கும்.

இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் , H7X என அறியப்பட்ட 7 சீட்டர் கொண்ட ஹாரியர் மாடலை பஸார்ட் எஸ்யூவி எனவும், மைக்ரோ எஸ்யூவி மாடலை H2X என்ற பெயரில் காட்சிப்படுத்தியுள்ளது.

Exit mobile version