Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ரூ.18,000 கோடி முதலீடு.., 10 எலக்ட்ரிக் கார்கள் என திட்டத்தை விரிவுப்படுத்தும் டாடா

By ராஜா
Last updated: 12,June 2024
Share
SHARE

tata harrier ev

FY30 ஆம் நிதியாண்டுக்குள் ரூ.16,000-ரூ.18,000 கோடி முதலீடு செய்து தனது போர்ட்ஃபோலியோவில் 10 எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் கொண்டிருப்பதுடன், வர்த்தக வாகனங்களுக்கு ஹைட்ரஜன் சார்ந்த என்ஜின் என மாறுபட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்களுக்கான கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்சின் எதிர்கால மாடல்கள் பற்றி முக்கிய குறிப்புகள்

  • FY24-25 நடப்பு நிதியாண்டில் ஹாரியர்.ev மற்றும் கர்வ்.ev இரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிட உள்ளது.
  • FY26-ல் பிரத்தியேக பிரீமியம் அவெனியா (Tata Avinya) எலக்ட்ரிக் பிராண்டை வெளியிடும் டாடா மோட்டார்ஸ் இதனை தமிழ்நாட்டில் தயாரிக்கலாம்.
  • ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்டின் எலக்ட்ரிக் கார்களையும் தமிழ்நாட்டில் தயாரிக்க வாய்ப்புள்ளது.
  • பிரசத்தி பெற்ற டாடா சியரா காரின் அடிப்படையிலான Sierra EV காரை 2025-2026 ஆம் நிதியாண்டில் வரவுள்ளது.
  • 2030 ஆம் நிதி ஆண்டுக்குள் 10 எலக்ட்ரிக் கார்களை தனது போர்ட்ஃபோலியோவில் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
  • இனி வரவுள்ள டாடா.இவி கார்கள்  Acti.ev மற்றும் ஜேஎல்ஆர் நிறுவன EMA பிளாட்ஃபாரம் அடிப்படையில் மட்டும் தயாரிக்கப்பட உள்ளது.
  • இவி சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு சார்ஜிங் நிலையங்களுடன் கூட்டணி அமைத்துள்ள இந்நிறுவனம், 2024 இறுதிக்குள் 10,000 மையங்களில் ஆதரவினை வழங்கும், இந்த எண்ணிக்கையை 2030க்குள் 1,00,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
  • சென்னை, டெல்லி போன்ற முன்னணி மெட்ரோ நகரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • உள்நாட்டின் உற்பத்தியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, டாடா மோட்டார்ஸ் தற்போதுள்ள 500 வோல்ட் முதல் 800 வோல்ட் வரையிலான EV architecture மேம்டுத்தவும், நீண்ட கால அடிப்படையில் 1000 வோல்ட் EV architecture முக்கியத்துவம் கொடுக்க உள்ளதை முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
  • வர்த்தக வாகனங்களில் டீசலுக்கு மாற்றாக H2 (ஹைட்ரஜன்) சார்ந்த என்ஜின்களை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகின்றது.
  • H2 மட்டுமல்லாமல் வர்த்தக வாகன சந்தையில் LNG, CNG மூலம் இயங்கும் வர்த்தக வாகனங்கள் என பல்வேறு மாற்று எரிபொருள் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
2025 BMW 2 Series Gran Coupe car
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது
TAGGED:TataTata curvvTata Harrier EVTata Sierra
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
hero destini prime price
Hero Motocorp
2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
ஓலா எஸ்1 புரோ + இ-ஸ்கூட்டர்
Ola Electric
ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள், சிறப்புகள்
bajaj chetak escooter
Bajaj
2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved