இந்தியாவில் முதன்முறையாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாமோ ரேஸ்மோ என்கின்ற டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்டிவ் காருடன் கூடுதலாக டாடா ரேஸ்மோ EV  +- மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளது.

டாடா ரேஸ்மோ EV +-

2017 ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட ரேஸ்மோ ஸ்போர்ட்டிவ் காரில் 190 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது முன்பு அறிமுகம் செய்யப்பட்ட மாடலுடன் ரேஸ்மோ காரில் மின்சாரத்தில் இயங்கும் பவர்ட்ரெயின் உடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 350 கிமீ தொலைவு பயணிக்கும் திறனை பெற்ற லித்தியம் ஐயன் பேட்டரியுடன் கூடிய மின்சார மோட்டார் பொருத்தப்பட்டிருக்கலாம். இதன் அதிகபட்ச பவர் 150 கிலோவாட் (203 HP ) ஆற்றல் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ ஆக இருக்கும்.

ஸ்போர்ட்டிவ் கார்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஆக்ரோஷமான தோற்றத்தை வெளிப்பட்டுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடாவின் ரேஸ்மோ காரின் முகப்பில் பை எல்இடி வட்ட வடிவ விளக்குகளை பெற்று விளங்குகின்றது. மேலே உயர்ந்த திறக்கும் பறக்கும் றெக்கை போன்ற அமைந்த கதவுகளுடன் வந்துள்ள இந்த காரின் முன்புறத்தில் 205/50 R17 ட்யூப்லெஸ் ரேடியல் டயர் மற்றும் பின்புறத்தில் 235/45 R18 ட்யூப்லெஸ் ரேடியல் டயரும் இணைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து டாடாவின் டாமோ பிராண்டு கார்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கனக்டேட் கார் நுட்பத்தினை பெற்றதாக விளங்கும். இதன் வாயிலாக ரேஸ்மோ காரில் நேவிகேஷன் , வாகனத்தின் இருப்பிடம் சார்ந்த தகவல்கள் உள்பட பல்வேறு விதமான வசதிகளை பெற இயலும்.

4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் அதாவது 3885மிமீ நீளமும் , 1810மிமீ அகலமும் , 1208மிமீ உயரத்தினை பெற்றுள்ள இந்த காரின் வீல்பேஸ் 2430 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரண்ஸ் 160மிமீ ஆகும். ரேஸ்மோ காரானது டாமோ பிராண்டின் மோஃபிளக்ஸ் ( MOFlex multi0material sandwich structure ) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட காராகும்.

மேலும் ரேஸ்மோ மாடலில் முன்பக்கத்தில் இரண்டு காற்றுப்பைகள் , 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் , ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற அம்சங்களை பெற்றதாக விளங்குகின்றது.