Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsWired

டாமோ ரேஸ்மோ கார் வருகையில் தாமதம்

By MR.Durai
Last updated: 15,July 2017
Share
SHARE

டாடா மோட்டார்சின் துனை பிராண்டான டாமோ பிராண்டில் முதல் மாடலாக ரேஸ்மோ கார் மாடலை 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தியது. தற்போது வரை இந்த கார் உற்பத்தி நிலைக்கு செல்லாமலே உள்ளது.

ரேஸ்மோ கார்

இந்தியாவின் முதல் கிட் கார் என்ற பெருமைக்குரிய ரேஸ்மோ கார் முதன்முறையாக 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த வருடத்தின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் டாமோ ரேஸ்மோ விற்பனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கார் கான்செப்ட் நிலையிலே உள்ளதாக ஆட்டோகார் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தி குறிப்பில் டாடாவின் டாமோ பிராண்டிற்கு ரூ. 250 கோடி முதலீட்டில் வடிவமைக்க உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்த ரேஸ்மோ மாடலுக்கு, நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக இதற்கு ஈடுகொடுக்கும் வகையிலான முதலீடு செய்ய டாடா சன்ஸ் உறுப்பினர்கள் பரிந்துரைத்த காரணத்தால் தற்போது வரை இந்த காருக்கு எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படாமலே கிடப்பில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேஸ்மோ என்ஜின்

1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு  ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 186 bhp பவருடன் மற்றும் 210 Nm டார்க் வெளிப்படுத்தி 6 வேக ஏஎம்டி கியர்பாக்சினை பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டிவதற்கு வெறும் 6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

நான்கு மீட்டருக்கு குறைந்த நீளத்தை கொண்ட அதாவது 3885மிமீ நீளமும் , 1810மிமீ அகலமும் , 1208மிமீ உயரத்தினை பெற்றுள்ள இந்த காரின் வீல்பேஸ் 2430 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரண்ஸ் 160மிமீ ஆகும். ரேஸ்மோ காரானது டாமோ பிராண்டின் மோஃபிளக்ஸ் ( MOFlex multi0material sandwich structure ) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட காராகும்.

மேலே உயர்ந்த திறக்கும் பறக்கும் றெக்கை போன்ற அமைந்த கதவுகளை பெற்றதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் முன்புறத்தில் 205/50 R17 ட்யூப்லெஸ் ரேடியல் டயர் மற்றும் பின்புறத்தில் 235/45 R18 ட்யூப்லெஸ் ரேடியல் டயரும் இணைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து டாமோ பிராண்டு கார்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கனக்டேட் கார் நுட்பத்தினை பெற்றதாக விளங்கும். இதன் வாயிலாக ரேஸ்மோ காரில் நேவிகேஷன் , வாகனத்தின் இருப்பிடம் சார்ந்த தகவல்கள் உள்பட பல்வேறு விதமான வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற இயலும்.

மேலும் ரேஸ்மோ மாடலில் முன்பக்கத்தில் இரண்டு காற்றுப்பைகள் , அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் , ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற அம்சங்களை பெற்றதாக விளங்குகின்றது.

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரேஸ்மோ ஸ்போர்ட்டிவ் கார் வருகை அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.

2025 BMW 2 Series Gran Coupe car
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது
TAGGED:RacemoTamo
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
2025 ஹோண்டா எஸ்பி 160
Honda Bikes
2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved