சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு காப்பீடு மூலம் இழப்பீடு கிடைக்குமா ?. எவ்வாறு வாகன காப்பீடு பெறுவது ? போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

chennai-floods-car

சென்னை மாநகரத்தில் பெய்த தொடர் கனமழையால் பல வாகனங்கள் நீருக்குள் மூழ்கியது. எனவே முதலில் வாகனங்களை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதனை குறித்து நேற்றைய பதிவில் பதிவிட்டிருந்தோம் இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களில் காப்பீடு பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க ; நீரில் மூழ்கிய கார் பைக் என்ன செய்ய வேண்டும்

முதல் தகவல்

காப்பீடு நிறுவனத்துக்கோ அல்லது உங்கள் அங்கிகரிக்கப்பட்ட டீலரிடமோ வாகனத்தினை நிலை பற்றிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது மிக அவசியமானதாகும். வெள்ளம் மட்டுமல்ல எந்தவொரு வாகன சேதமோ அல்லது விபத்து என எதுவென்றாலும் உங்கள் காப்பீடு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயமானது.

படங்கள்

உங்கள் கார் தண்ணீரில் மூழ்கியுள்ள படங்களோ அல்லது பாதிக்கப்படிருக்கும் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் உங்கள் வாகனத்தின் பதிவெண் கட்டாயம் இருப்பது மிக அவசியமாகும்.

எந்தவொரு வேலையும்

வாகனத்தினை காப்பீடு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் வந்து ஆய்வு செய்யும் வரை வாகனத்தை ஸ்டார்ட் செய்வதனை கூட தவிர்க்க வேண்டும்.

மதிப்பீட்டாளர்

மதிப்பீட்டாளர் வாகனத்தை முழுதாக மதிப்பீட்ட பின்னர் அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான அனுமதியை வழங்குவார்.  சர்வீஸ் மையத்தில் வாகனத்தை விட்ட பின்னர் அவர்கள் ஒரு மதிப்பீடு தருவார்கள்.

அந்த மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டாளரின் மதிப்பீடு என இரண்டையும் ஒப்பீட்டு காப்பிட்டு நிறவனம் அனுமதி வழங்கும்.

 டெலிவரி

வாகனத்தை சர்வீஸ் மையத்தில் முழுதாக பணிகள் முடித்த பின்னர் காப்பீடு நிறவனம் செலவு தொகையை கனக்கீட்டு அதற்க்கு ஏறப் உங்களுக்கான காப்பீடு தொகையை தரும்.

Chennai-floods-aid

தேவைப்படும் ஆவனங்கள்

வாகனத்தின் பதிவு ச் சான்று

காப்பீடு பத்திரம்

ஓட்டுநர் உரிமம்

வர்த்தக வாகனங்களுக்கு கூடுதலாக பர்மீட் மற்றும் தகுதிச் சான்று தேவைப்படும்.