Categories: Auto News

இந்தியாவின் டாப் 10 கார் தயாரிப்பாளர்கள் – ஜனவரி 2024

innova crysta sales

கடந்த ஜனவரி 2024 மாதந்திர விற்பனையில் டாப் 10 இடங்களை கைப்பற்றி நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கையில் மாருதி சுசூகி முதலிடத்தில் 1,66,802 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே ஜனவரி 2023ல் விற்பனை 1,47,348 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது.

மாருதியின் விற்பனை எணிக்கையில் வேகன்ஆர், ஃபிரான்க்ஸ், டிசையர் மற்றும் பலேனோ உட்பட ஸ்விஃப்ட், கிராண்ட் விட்டாரா ஆகியவை அமோக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. ஆனால் ஜிம்னி, சியாஸ் விற்பனை மிக மோசமான வீழ்ச்சி சந்தித்திருப்பதுடன், ஆல்டோ விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 55 % வீழ்ச்சி கண்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் இரண்டாமிடத்தில் 57,115 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே ஜனவரி 2023ல் விற்பனை 50,106 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. இந்நிறுவன எலைட் ஐ20, கிராண்ட் ஐ10 விற்பனை சரிவடைந்துள்ளது. அடுத்த ஹூண்டாய் கிரெட்டா விற்பனை எண்ணிக்கை முக்கிய பங்காற்றுகின்றது.

டாடா மோட்டார்ஸ் மூன்றாமிடத்தில் 53,635 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே ஜனவரி 2023ல் விற்பனை 47,990 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. டாடா நிறுவனத்துக்கு நெக்ஸான், பஞ்ச், டியாகோ மற்றும் டிகோர் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Rank OEM ஜனவரி 24 ஜனவரி 23 Y o·Y
1 மாருதி சுசூகி 1,66,802 1,47,348 13.2 %
2 ஹூண்டாய் 57,115 50,106 14 %
3 டாடா மோட்டார்ஸ் 53,635 47,990 11.8%
4 மஹிந்திரா 43,068 33,040 30.4%
5 கியா 23,769 28,634 -17%
6 டொயோட்டா 23,197 12,728 82.4%
7 ஹோண்டா 8,681 7,821 11%
8 ரெனால்ட் 3,826 2,906 27.2%
9 எம்ஜி 3,825 4,114 -7%
10 ஃபோக்ஸ்வேகன் 3,267 2,906 12.4 %

 

முதல் 10 இடங்களில் டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை அதிகபட்சமாக 82.4 % அதிகரித்துள்ளது. அடுத்தப்படியாக,  மஹிந்திரா மற்றும் ரெனால்ட் உள்ளது. வீழ்ச்சியில் கியா மற்றும் எம்ஜி உள்ளது.

Recent Posts

விரைவில் புதிய ஹீரோ ஜூம் 125R விற்பனைக்கு வெளியாகிறது

ஹீரோவின் மிகவும் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் ஜூம் 125R சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள்…

7 hours ago

ஆடம்பர வசதிகளுடன் எம்ஜி வின்ட்சர் இவி வெளியானது

  எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் மாடலாக வின்ட்சர் இவி ரூ.9.99…

9 hours ago

ரெட்ரோ ஸ்டைல், நவீன வசதிகளுடன் ஹீரோ டெஸ்டினி 125 அசத்துகின்றதா..?

125சிசி சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டெஸ்டினி 125 ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒரு விற்பனை எண்ணிக்கை…

11 hours ago

e6 இனிமேல் BYD eMax 7 என அழைக்கப்படும்..!

இந்தியாவில் BYD நிறுவனம் தனது இ6 மாடலை புதிய இமேக்ஸ் 7 என்ற பெயரில் விற்பனைக்கு அக்டோபர் முதல் வாரத்தில்…

16 hours ago

மார்ச் 2025ல் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு மார்ச் 2025ல் வெளியாகும் என…

1 day ago

500 கிமீ ரேஞ்ச் வழங்கும் eVX எலெக்ட்ரிக் எஸ்யூவியை உறுதி செய்த மாருதி சுசூகி

நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மாடலை அடுத்த சில மாதங்களுக்குள்…

1 day ago