Home Truck

அசோக் லேலண்ட் பெற்ற 2580 பஸ் டெலிவரி ஆர்டர் விபரம்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளராக விளங்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் , 2580 பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டரை மாநில போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக பெற்றுள்ளது.

அசோக் லேலண்ட் பஸ்

சென்னையில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனம், உத்தரப்பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் UPSRTC (Uttar Pradesh State Roadways Transport Corporation), மற்றும் சண்டிகர் போக்குவரத்து கழகம் (CTU – Chandigarh Transport Undertaking) ஆகிய மூன்று அரசு போக்குவரத்து கழக நிறுவனங்களுக்கும் மார்ச் 2019-க்குள் 2580 பேருந்துகளை டெலிவரி செய்வதற்கான ஆர்டரை லேலண்ட் பெற்றுள்ளது.

ஒரே வாகன தயாரிப்பாளரிடமிருந்து 2580 பேருந்துகளை டெலிவரி செய்யும் அசோக் லேலண்ட் வருகின்ற மார்ச் 2019-க்குள் இந்த பேருந்துகளை மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு டெலிவரி செய்ய உள்ளது.

ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்த அசோக் லேலண்ட் தலைவர் வினோத் கே . தசாரி கூறுகையில், நாங்கள் மாநில போக்குவரத்து கழகங்களின் ஆர்டரை பெற்றது மிகுந்த மகழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புடன் இணைந்து மதிப்பைக் கொண்டுவருவதற்கான திறமை ஆகியவை இந்தியாவின் பஸ் சந்தையில் எங்கள் தலைமைத்துவ நிலையை பராமரிக்க உதவுகிறது.

எங்கள் பேருந்துகள் நீடித்த, வலுவான மற்றும்நவீன  தொழில்நுட்பம் பெற்று விளங்குவதனால் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பராமரிப்பு மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.  சந்தை மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றி ஆழமான புரிதல் காரணமாகவே எங்களுக்கு இந்த பெரிய பஸ் ஆர்டரை வென்றெடுக்க உதவியது. ” என அசோக் லேலண்ட் குளோபல் பஸ்ஸ் துனை தலைவர் சஞ்சய் சரஸ்வத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து தயாரிப்பாளராக விளங்கும் அசோக் லேலண்ட் உலகயளவில் பஸ் தயாரிப்பில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகின்றது.

Exit mobile version