ரூ.350 கோடி மதிப்பிலான ஆர்டரை கைப்பற்றிய அசோக் லேலண்ட்

பிரசத்தி பெற்ற விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.350 கோடி மதிப்பில் 3123 மற்றும் 3723 டிரக் மாடல்களில் 1200 டிரக்குகளை சப்ளை செய்யும் ஆர்டரை அசோக் லேலண்டு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அசோக் லேலண்ட் & விஆர்எல்

இந்தியாவின் முன்னணி ஃபிளிட் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வி.ஆர்.எல் லாஜிஸ்டிக்ஸ் தொடர்ந்து பல ஆண்டுகளாக அசோக் லேலண்ட் வாகனங்களை பயன்படுத்தி வருகின்ற நிலையில், புதிதாக இந்நிறுவனம் 3123 மற்றும் 3723 டிரக் வரிசை மாடல்களில் தலா 600 என மொத்தம் 1200 டிரக்குகளை வாங்குவதற்கான ஆர்டரை லேலண்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ள டிரக்குகள் நவீன தலைமுறை நுட்பங்கள் மற்றும் வசதிகளை பொருத்தப்பட்டதாக வழங்கப்பட உள்ளது. இந்த டிரக்குகள் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனம், சிறந்த பளு தாங்கும் திறன் மற்றும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வி.ஆர்.எல் சிஎம்டி அதிகாரி விஜய் சங்கேஷ்வர் கூறுகையில், எங்களுடைய முந்தைய போக்குவரத்து வாகனங்களில் 80 சதவீத வாகனங்கள் அசோக் லேலண்ட நிறுவனத்துடையதாகும். இரு நிறுவனங்களிடேயே உறவு மிகச் சிறப்பாக அமைந்திருப்பதற்கு அந்நிறுவனத்தின் டிரக்குகள் மிக சிறப்பான ஆயுள் மற்றும் நம்பகதன்மை கொண்டதாக விளங்குவதே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You