Automobile Tamilan

இந்தியாவின் முதல் ஏஎம்டி டிரக் அறிமுகம் – ஐசர் ப்ரோ 3016 AMT

eicher pro 3016 amt truck launched

ஐசர் மோட்டார்ஸ் நிறுவனம், முதன்முறையாக இந்திய சந்தையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற ஐசர் ப்ரோ 3016 AMT மாடலை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேனுவல் கியர் இல்லாத முதல் டிரக் மாடலாக விளங்குகின்றது.

ஐசர் ப்ரோ 3016 AMT

ஓட்டுநர்கள் கிளட்ச் மற்றும் கியர் மாற்றும் பளுவிலிருந்து விடுபடும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள ஐசர் ப்ரோ 3016 ஏஎம்டி டிரக் , இந்நிறுவனத்தின் மத்தியபிரதேச பிதாம்பூர் ஐசர் டிரக்ஸ் மற்றும் பஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

கிளட்ச் பெடல் இல்லாத இந்த டிரக் மாடல் ஓட்டுநர்களின் அதிகப்படியான பளுவினை குறைக்கும் என்பதனால், மிக சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் டிரக்குகளை இயக்க வழி வகுக்கின்றது. கார்களில் இந்த நுட்பம் பரவலாக பயன்பாட்டில் உள்ள நிலையில் முதன் முறையாக இந்திய வர்த்தக வாகன சந்தையில் 16 டன் பிரிவில் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டிரக்கில் உள்ள இன்டலிஜென்ட் ஷிஃப்ட் கன்ட்ரோல் ஏக்ச்வேட்டர் மூலம் கிளட்ச் பெடல் செயற்பாட்டை குறைத்துள்ளது. ஆட்டோ மற்றும் மேனுவல் என இருமோட்களில் வந்துள்ள இந்த டிரக்கில் பவர் மற்றும் ஈக்கோ என இரு மோட் ஆப்ஷன் வாயிலாக சிறந்த மைலேஜ் பெற ஈக்கோ மற்றும் சிறப்பான செயல்திறனை வழங்க பவர் மோட் ஆப்ஷன் அமைந்துள்ளது.

Eicher Pro 3016 AMT டிரக் மாடல் மிக சிறப்பான உத்தரவாதத்தை வாடிக்கையாளர்களளுக்கு வழங்குவதுடன், பாதுகாப்பு மற்றும் ஓட்டுநரின் பனிச்சுமையை குறைக்க உதவுகின்றது. அதிகப்படியான தொலைவை ஓட்டுநர்கள் மிக இலகுவாக இயக்க கியர் ஷிஃப்டிங் இல்லாத ஏஎம்டி மாடல் மிகுந்த பலனை தரும் என ஐசர் குறிப்பிட்டுள்ளது.

ஐசர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், 4.9 டன் முதல் 55 டன் வரையில் உள்ள பிரிவுகளில் பல்வேறு டிரக் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

Exit mobile version