ஐஷர் புரோ 6049 , புரோ 6041 டிரக்குகள் விற்பனைக்கு வெளியானது

வால்வோ ஐஷர் வர்த்தக வாகன பிரிவின் ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், புதிதாக இரண்டு டிரெயிலர் டிரக்குகளை 41 டன் மற்றும் 49 டன் என இரண்டு பிரிவுகளில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஐஷர் புரோ 6000 வரிசையில் 41 டன் பிரிவில் புரோ 6049 மற்றும் 49 டன் பிரிவில் புரோ 6049 என இரண்டு டிரக்குகள் வந்துள்ளது.

ஐஷர் புரோ 6049

 

VE Commercial Vehicles (VECV) பிரிவின் அங்கமாக செயல்படுகின்ற ஐஷர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரு டிரக்குகளும் மிக சிறப்பான நிலைப்பு தன்மை கொண்டு சிறப்பான செயல்திறனை வழங்கவல்லதாக விளங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக 41 டன் பிரிவில் ஹாலேஜ் பெற்ற டிரக் மாடல் 37 டன் மாடலை விட சுமார் 3.5 டன் கூடுலான பளு சுமக்கும் திறனுடன் ஐஷர் புரோ 6041 டிரக் விளங்குகின்றது.

இரண்டு டிரக்குகளிலும் VEDX8 BSIV எஞ்சின் பொருத்தபட்டு அதிகபட்ச எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதுடன் 250 பிஹெச்பி பவர் மற்றும் 950 என்எம் டார்க் வழங்குவதுடன் பவரை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல ZF நிறுவனத்தின்  1110 TD 9 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இரு மாடல்களும் சிறப்பான லாபத்தை தரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்திய சந்தையில் அமோகமான வளர்ச்சி பெறும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.