புதிய மேன் CLA BS-IV பஸ் அடிச்சட்டம் அறிமுகம்

இந்தியாவின் வரத்தக வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான மேன் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், புதிய சிஎல்ஏ வரிசை பஸ் அடிச்சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேருந்து புறநகரங்களுக்கு இடையிலேனா இணைப்பை ஏற்படுத்த உதவும் என மேன் குறிப்பிட்டுள்ளது.

மேன் CLA BS-IV பஸ்

சமீபத்தில் மேன் நிறுவனம் பெங்களூருவில் இரு விதமான பேருந்து அடிச்சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 18.250 (4×2) மற்றும் 22.300 (6×2) என மல்டி ஆக்சில் கொண்ட பேருந்த அடிச்சட்டங்களை கட்டமைப்பதற்கு மூன்று நிறுவனங்களுடன் மேன் கையெழுத்திட்டுள்ளது.

CLA BS-IV பேருந்துகளில்  250HP மற்றும் 300HP ஆற்றலை வெளிப்படுத்தும் MAN D-0836 டீசல் எஞ்சின் டர்போ சார்ஜ்டு, இன்டர்கூல் காமன்ரெயில் டீசல் இன்ஜெக்‌ஷன் நுட்பத்தை கொண்டதாக பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மிக சிறப்பான உறுதியை கொண்ட அடிச்சட்டத்துடன், ஏர் டிரம் பிரேக்குகளுடன், ஏபிஎஸ் பிரேக்கினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பீதாம்பூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த அடிச்சட்டங்கள் வாடிகையாளரின் தேவைக்கேற்ப வடிவமைக்கும் வகையில் கிடைக்கும் என மேன் டிரக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

Recommended For You