Automobile Tamil

பெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசுகி சூப்பர் கேரி மினி டிரக் மாடலின் அடிப்படையில் கிடைக்கின்ற சுசுகி கேரி தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கேரி டிரக் உற்பத்தி செய்யப்பட்டு 100 நாடுகளுக்க மேல் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இந்த இலகு ரக டிரக் 145 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மொத்தமாக இதுவரை சர்வதேச அளவில் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2019 சுசுகி கேரி மினி டிரக்

மாருதி சியாஸ், எர்டிகா கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதே பெட்ரோல் என்ஜின் K15B-C என தற்போது கேரி மினி டிரக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 97 PS பவர் மற்றும் 135 Nm டார்க் வழங்குகின்றது.

1 டன் எடை தாங்கும் திறனை கொண்ட குறைந்த விலை மினி டிரக் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வரும் ஏப்ரல் 2020 முதல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சூப்பர் கேரி டிரக்கினை கைவிட உள்ள மாருதி நிறுவனம்., தற்போது இந்தோனேசியா சந்தையில் வெளியிடப்பட்ட மாடலின் அடிப்படையிலே பெட்ரோல் என்ஜினை பொருத்தி கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனை வழங்க உள்ளது.

இந்தியாவில் மாருதியின் சூப்பர் கேரி மினி டிரக் அமோக ஆதரவை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் 2 சதவீத வர்த்தக வாகன சந்தையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

Exit mobile version