சிஎன்ஜி ஆப்ஷனில் டாடா 407 விற்பனைக்கு வெளியானது

0

tata 407 cng launched

35 ஆண்டுகளுக்கு மேலாக விற்பனையில் உள்ள டாடா 407 டிரக்கில் கூடுதலாக சிஎன்ஜி வேரியண்ட் மாடல் ரூ.12.07 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற டீசல் 407 மாடலை விட 35 % கூடுதல் லாபத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Google News

டாடா 407 சிறப்புகள்

இந்தியாவில் கிடைக்கின்ற இடைநிலை மற்றும் இலகுரக வர்த்தக வாகன (I & LCV) பிரிவில் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கும் 407 லைட் லாரியை டாடா மோட்டார் இதுவரை, டீசல் எஞ்சினுடன் மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், இப்பொழுது எரிபொருள் சிக்கனம் மற்றும் மாசு உமிழ்வுக்கு தீர்வும் கானும் வகையில் சிஎன்ஜி வசதியுடன் வெளியிட்டுள்ளது.

டாடா 407 சிஎன்ஜி டிரக்கிற்க்கு 3.8 லிட்டர் சிஎன்ஜி எஞ்சின் SGI இன்ஜின் தொழில்நுட்பத்தை பெற்று அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இதன் டார்க் 285 என்எம் சக்தியை உருவாக்குகிறது. அதிகபட்சமாக 180 லிட்டர் எரிபொருள் கலனை கொண்டுள்ள டிரக்கில் G400 5 ஸ்பீடு மேனுவல் சின்க்ரோமேஷ் கியர்பாக்ஸ் மூலம் இயக்கப்படுகின்றது. டாடா 407 டிரக்கின் மொத்த வாகன எடை (GVW) உடன் 4,995 கிலோ மற்றும் 10 அடி நீளம் பெற்ற சுமை ஏற்றும் தளத்துடன் கிடைக்கிறது. எனவே, இது அதிக சுமை தாங்கும் திறனை வழங்குகிறது.

டாடா 407 லாரியில் செமி-ஃபார்வர்ட் கண்ட்ரோல் (SFC) கேபினைப் பெற்றுள்ள நிலையில் சிறந்த பாதுகாப்பிற்காக உயர் தர எஃக்குடன் கட்டப்பட்டுள்ளது. முன் பாராபோலிக் சஸ்பென்ஷனுடன் வந்துள்ளது. கிளட்ச் மற்றும் கியர் ஷிப்ட் முயற்சியைக் கணிசமாகக் குறைக்கிறது மற்றும் குறைந்த NVH அளவுகளை வழங்குகிறது . மற்ற வசதிகளைப் பொறுத்தவரை, கேபினில் யூஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் ப்ளாபங்க்ட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த 407 டிரக்கின் மேலாண்மை வசதிக்காக Fleet Edge தளத்துடன் வருகிறது. 2 வருட இலவச சந்தாவுடன். டாடா 407 சிஎன்ஜியும் 3 ஆண்டுகள் அல்லது 3 லட்சம் கிலோமீட்டர் உத்தரவாதத்துடன் வருகிறது.