ஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்

0

tata prima truck

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் பிரிவில் பிஎஸ்6 என்ஜின் பெற்ற வரிசையில் ப்ரிமா 5330.S FL டிரக் மேம்பட்டதாக வெளியிடப்பட்டுள்ளது. காரின் இன்டிரியருக்கு இணையாக கேபின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கம்மின்ஸ் 6.7 லிட்டர் என்ஜினை கொண்டு அதிகபட்சமாக 1100 என்எம் டார்க் மற்றும் 300 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றது. டாடாவின் G1150 டிரான்ஸ்மிஷன் 9 +1  கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மல்டி டிரைவ் மோட் பெற்றதாக அமைந்துள்ளது.

இன்டிரியரை பொறுத்தவரை காரின் டேஸ்போர்டுக்கு இணையாக டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஆண்ட்ராய்டு  கனெக்ட்டிவிட்டி வசதி வழங்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எரிபொருள் திருட்டை தடுக்கும் அமைப்பு, புராஜெக்டேட் ஹெட்லேம்ப் எல்இடி ரன்னிங் விளக்கு, ரிவர்ஸ் கேமரா அசிஸ்ட் போன்றவை இடம்பெற்றுள்ளது.

இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் பிரைமா உட்பட 1 டன் முதல் 55 டன் வரையிலான அனைத்து டிரக்குகள், பேருந்துகளில் பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக வெளியிட்டுள்ளது.