டிவிஎஸ் ஜூபிடர் ZX ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் அறிமுகம்

கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்ற டிவிஎஸ் ஜூபிடர் மாடல் ஆனால் தற்பொழுது ரூபாய் 80,973 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்கூட்டர் மேட் பிளாக் மற்றும் காப்பர் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கின்றது.

TVS Jupiter ZX

Smartxonnect டாப் வேரியன்டில் அறிமுகப்படுத்தப்பட்டு முழு டிஜிட்டல் கன்சோல், வாய்ஸ் அசிஸ்ட், நேவிகேஷன் அசிஸ்ட் மற்றும் எஸ்எம்எஸ்/அழைப்பு எச்சரிக்கைகள் போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது. Smartxonnect அமைப்பில் புளூடூத் வாயிலாக இயக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இது TVS Connect மொபைல் செயலி வசதி Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கிறது.

புளூடூத் ஹெட்ஃபோன்கள், வயர்டு ஹெட்ஃபோன்கள் அல்லது இணைக்கப்பட்ட மற்றும் புளூடூத் பொருத்தப்பட்ட ஹெல்மெட் போன்ற இணைக்கப்பட்ட சாதனத்தின் மூலம் வாய்ஸ் அசிஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்தலாம். ரைடருக்கு ஸ்பீடோமீட்டரில் அறியலாம்.

மற்ற வேரியன்டிலிருந்து வேறுபடுத்த, இதில் டசில்வர் ஓக் வண்ண உள் பேனல்களுடன் வருகிறது. இந்த அம்சங்கள் தவிர, ஸ்கூட்டர் புதிய டிசைன் பேட்டர்னுடன் புதிய டூயல் டோன் இருக்கையையும் பெறுகிறது. பில்லியன் ரைடருக்கு கூடுதல் வசதியாக பின்புற பேக்ரெஸ்ட் வழங்கப்படுகிறது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 110சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 7500 ஆர்பிஎம்மில் 8 பிஎஸ் மற்றும் 5500 ஆர்பிஎம்மில் 8.8 என்எம் டார்க்கை உருவாக்குகிறது.

Exit mobile version