Auto News

2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 2V விற்பனைக்கு வெளியானது

2024 Hero Xtreme 160r

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 2V மாடல் ஆனது ஒற்றை வேரியண்டில் மட்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் விலை முந்தைய மாடலை விட ரூபாய் 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இருக்கையின் அமைப்பு மேம்படுத்தப்பட்டதாகவும் டிஜிட்டல் கிளஸ்டரில் டிராக் டைமர் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்பாக டிஸ்க் பிரேக் பின்புறத்திலும் கொடுக்கப்பட்டு பல்வேறு வேரியண்ட் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ஒற்றை வேரியண்ட் மட்டும் சிங்கிள் டிஸ்க் உடன் ஸ்டெல்த் கருப்பு நிறத்தில் கிடைக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட டையில் லைட் , எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடலை போல டிராக் டைமர் (Drag Timer) என்ற பெயரில் ஆக்சிலிரேஷனை அறிவதற்காக D1 மோடில், 0-60 km/h) மற்றும் லேப் டைம் நேரம் அடுத்து, D2 மோடில், quarter mile timing ஆகியவற்றை அறிவதற்கும், உங்கள் வேகமான நேரத்தை பேக்கப் எடுக்கவும் அனுமதிக்கின்றது.

163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் 2 வால்வு பெற்று அதிகபட்சமாக 8500rpm-ல் 14 hp பவர் மற்றும் 6500rpm-ல் 15 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 130 மிமீ டிஸ்க் உள்ளது.

2024 ஹீரோ Xtreme 160R 2V – ₹ 1,11,111

(Ex-showroom)