Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபோக்ஸ்வேகன் மோயா ரைட்ஷேரிங் நிறுவனம் அறிமுகம்

by MR.Durai
6 December 2016, 11:09 pm
in Auto News, Wired
0
ShareTweetSend

உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மோயா (MOIA) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை ரைட்ஷேரிங் எனப்படும் கார் பகிர்தல் மற்றும் எதிர்கால மொபிலிட்டி சேவைகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழமத்தின் 13வது பிராண்டாக உருவாக்கப்பட்டுள்ள மோயாவில் எதிர்கால உலகின் ஆட்டோமொபைல் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மொபிலிட்டி சேவைகளை வழங்கும் வகையில் அதாவது கார்பூலிங் எனப்படும் ரைட்ஷேரிங் சேவைகள் அதனை சார்ந்த நுட்பங்களை சிறப்பு பயன்பாடு எலக்ட்ரிக் வாகனங்களை வடிவமைத்து வழங்க திட்டமிட்டுள்ளது.

MOIA பிராண்டு பெயர் விளக்கம்

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரை தலைமையிடமாக கொண்டு சேவையை தொடங்க உள்ள ஃபோக்ஸ்வேகன் மோயா பெயர் விளக்கம் என்னவென்றால் சமஸ்கிருத வாரத்தையான மாயா என்பதில் இருந்து உருவான  மோயா ஆனது ஃபோக்ஸ்வேகன பெயரில் வரும் ஆங்கில எழுத்துக்களான V W என்பதனை தலைகீழாக போட்டால் வருகின்ற M A என்பதனை கொண்டு நடுவில் 0 1 என்கின்ற எண்ணை சேர்த்துள்ளதாக மோயா தலைமை செயல் அதிகாரி ஓலே ஹார்ம்ஸ்  விளக்கம் கொடுத்துள்ளார்.

சிறப்பு பயன்பாட்டு மின்சார வாகனங்களை தயாரிப்பதன் வாயிலாக ரைட்ஷேரிங் நுட்பத்தினை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான சேவையை உலக அளவில் வழங்கும் நோக்கில் திட்டமிட்டுள்ளது.

மிகவும் மலிவான விலையில் வழங்கப்பட உள்ள இந்த சேவையில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட்போன் வாயிலாக முன்பதிவு செய்யும் பொழுது வாகனங்கள் மிக எளிதாக அவர்கள் பயன்பாடுக்கு கிடைக்கும். மோயா நிறுவனத்தின் இந்த சேவை முதற்கட்டமாக அடுத்த ஆண்டின் மத்தியில் ஐரோப்பிவின் இரு முக்கிய நகரங்களில் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கு முழுமையாக பல்வேறு நகரங்களுக்கு விரிவுப்படுத்த உள்ளது. வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் உலகின் முன்னனி ரைட்ஷேரிங் சேவையை வழங்கும் நிறுவனமாக விளங்கும் வகையில் தன்னுடைய செயல்திறனை வழங்க உள்ளது.

Related Motor News

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

160 கிமீ ரேஞ்சுடன் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

ரூ.26.78 லட்சத்தில் காம்பஸ் டிராக் எடிசனை வெளியிட்ட ஜீப்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் ஸ்பீடு T4

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

Ather Energy

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan