இந்தியாவில் 350ccக்கு குறைந்த இரு சக்கர வாகனங்களுக்கு 18 % வரியாக மாற்றப்பட்டுள்ளதால் யமஹா நிறுவனத்தின் ஃபேசினோ முதல் R15 வரை டாப் வேரியண்டுகளில் விலை குறைப்பு ரூ.7,759 முதல் ரூ.17, 581 வரை செப்டம்பர் 22 முதல் குறைய உள்ளது.
குறிப்பாக யமஹா வெளியிட்டுள்ள அறிக்கையில் முழுமையான ஜிஎஸ்டி பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், விலை குறைப்பு தொடர்பான அட்டவனையில் டாப் வேரியண்டு அதிகபட்சமாக எவ்வளவு குறையும் என தெளிவுப்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஸ்கூட்டர் வரிசையில் உள்ள ஃபேசினோ மற்றும் ரே இசட்ஆர் போன்றவை முறையே ரூ.8,509 மற்றும் ரூ,7,759 என குறைய உள்ளது. ஸ்போட்டிவ் ஏரோக்ஸ் 155 வெர்ஷன் S டாப் வேரியண்ட் விலை ரூ.12,753 குறைய உள்ளது.
பிரபலமான ஆர்15 மாடலின் டாப் வேரியண்ட் ரூ.17,581 குறைக்கப்பட உள்ள நிலையில், தேக்டூ ஸ்டைல் எம்டி-15 விலை ரூ.14,964 ஆகவும், FZ வரிசை டாப் ஹைபிரிட் விலை குறைப்பு ரூ.12,430 வரை குறைய உள்ளது.
கீழே அட்டவனையில் விளக்கமாக உள்ளது.
Models | Old Price (₹) | New Price (₹) | GST Benefit Upto (₹) |
---|---|---|---|
R15 | 2,12,020 | 1,94,439 | 17,581 |
MT15 | 1,80,500 | 1,65,536 | 14,964 |
FZ-S Fi Hybrid | 1,45,190 | 1,33,159 | 12,031 |
FZ-X Hybrid | 1,49,990 | 1,37,560 | 12,430 |
Aerox 155 Version S | 1,53,890 | 1,41,137 | 12,753 |
RayZR | 93,760 | 86,001 | 7,759 |
Fascino | 1,02,790 | 94,281 | 8,509 |