ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக் டீசர் வீடியோ வெளியீடு

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய 750சிசி மோட்டார் சைக்கிள் வருகை குறித்தான முதல் டீசர் வீடியோ ஒன்றை சித்தார்த் லால் வெளியிட்டுள்ளார்.

ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக் டீசர்

வருகின்ற நவம்பர் 7ந் தேதி தொடங்க உள்ள பிரசத்தி பெற்ற EICMA 2017  மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் வெளியிடப்பட உள்ள புதிய என்ஃபீல்டு மாடல் 750சிசி எஞ்சின் கொண்டதாக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் அறிமுக தேதி குறிப்பிட்டு #ridepure என்ற ஹேஸ்டேக் உடன் வெளியிட்டுள்ளார்.

ads

கஃபே ரேஸர் மற்றும் ஸ்ட்ரீட்  என இரு விதமான மாடல்கள் அடிப்படையில் 750சிசி எஞ்சின் பெற்ற இந்த மாடல் அதிகபட்சமாக 50 பிஹெச்பி மற்றும் 60 என்எம் டார்க் வெளிப்படுத்தலாம் என தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் மாடல்களில் அதிகபட்ச வேகத்தை வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

07.11.17 #RoyalEnfield #ridepure #EICMA

A post shared by Sid Lal (@sidlal) on

Comments