புதிய நிறத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 அறிமுகம்

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே நிறம் ரூ.1, 59,677 லட்சம் விலையிலும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் நிறம் ரூ.2, 05,213 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

கிளாசிக் 350 மாடலில் 346சிசி ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 19.8 bhp பவர் மற்றும் 28 Nm டார்க் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பின்புற சக்கரங்களுக்கு 153mm டிரம் பிரேக் பொருத்தப்பட்டிருந்த நிலையில் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும் நோக்கில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. மேலும் தண்டர்பேர்டு மாடலில் உள்ள அதே ஸ்விங் ஆர்ம் பெற்றுள்ளது.

ads

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500

கிளாசிக் 500 மாடலில் 499சிசி ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 27.2 bhp பவர் மற்றும் 41 Nm டார்க் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பின்புற சக்கரங்களுக்கு 153mm டிரம் பிரேக் பொருத்தப்பட்டிருந்த நிலையில் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும் நோக்கில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. மேலும் தண்டர்பேர்டு மாடலில் உள்ள அதே ஸ்விங் ஆர்ம் பெற்றுள்ளது.

கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500

ராயல் என்ஃபீல்டு கிளாக் 350 – ரூ.1, 59,677 லட்சம் (கன்மெட்டல் கிரே நிறம்)

ராயல் என்ஃபீல்டு கிளாக் 350 – ரூ.2, 05,213 லட்சம் (ஸ்டெல்த் பிளாக் நிறம்)

(சென்னை ஆன்-ரோடு விலை )

Comments