எஸ்யூவி, ஆடம்பர கார்களின் விலை உயருகின்றது – ஜிஎஸ்டி

ஆடம்பர சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி கார்களின் விலை ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு லட்சங்களில் குறைந்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் மீண்டும் பழைய வரி விதிப்புக்கு இணையான விலையே  எஸ்யூவி, ஆடம்பர கார்களின் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.

ஜிஎஸ்டி எதிரொலி

ஜிஎஸ்டிக்கு முந்தைய வரி விதிப்பின் அடிப்படையில் ஆடம்பர சொகுசு கார்கள் மற்றும் எஸ்.யூ.வி 55 சதவிதமாக இருந்த வரி விதிப்பு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு பிறகு 28 சதவிகித அடிப்படையாக ஆட்டோமொபைல் பிரிவுக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், கூடுதலாக இழப்பீடு வரி 15 சதவிதம் என மொத்தமாக 43 % வரி அதிகபட்சமாக விதிக்கப்பட்டது.

ads

இதன் காரணமாக பல்வேறு ஆடம்பர சொகுசு கார்கள் கோடிகள் முதல் லட்சங்கள் வரை விலை குறைந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பேசிய அதிகாரி ஒருவர், செஸ்ஸில் இழப்பீட்டு வட்டி விகிததத்தை அதிகரிப்பதற்கு ஜி.எஸ்.டி. சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

எனவே, புதிதாக வரவுள்ள இந்த வரி விதிப்பால், எஸ்.யூ.வி மற்றும் அனைத்து ஆடம்பர சொகுசு கார்களும் 28 சதவிகதம் வரி மற்றும் கூடுதலாக 25 சதவிதம் செஸ் வரியை பெறும். இதன் காரணமாக வருங்காலத்தில் எஸ்.யூ.வி கார் அல்லது ஆடம்பர சொகுசு கார்களுக்கு, இனி மொத்தமாக நீங்கள் 53 சதவீதம் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளுப்படுவார்கள்.

லட்சங்களில் விலை குறைந்த எஸ்யூவி கார்கள் மீண்டும் இனி லட்சங்களில் விலை உயரும் வாய்ப்புள்ளதால், எஸ்யூவி மற்றும் ஆடம்பர கார் பிரியர்கள் கார்களை வாங்க இதுவே சரியான தருணமாகும்.

Comments