ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பை தொடர்ந்து பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் ஃபோர்டு இந்தியா 4.5 சதவிகித வரை விலையை குறைத்துள்ளது.

 ஃபோர்டு இந்தியா – ஜிஎஸ்டி

ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் கார்கள் மற்றும் எஸ்யூவி-கள் விலையை ரூ. 2000 முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது. மாநில வாரியாக விலையில் மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

குறிப்பாக மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையில் என்டேவர் பிரிமியம் எஸ்யூவி அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது, டெல்லியில் 1.50 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபிகோ ரூ.2000, ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 8,000 என மாடல்கள் வாரியாக குறைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஃபோர்டு நிறுவனம் தனது என்டேவர் எஸ்யூவி மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியன்ட் பெற்ற மாடல்களை அனைத்தையும் நீக்கியுள்ளது.

மாருதி, பிஎம்டபிள்யூ, ஆடி, ஜாகுவார் என பல்வேறு சொகுசு கார் நிறுவனங்கள் உள்பட பல்வேறு இருசக்கர வாகன தயாரிப்பாளர்களும் ஜிஎஸ்டி வரவினால் தங்களதுவிலையை மாற்றியமைத்துள்ளனர்.