டெல்லி : சுற்றுச்சூழல் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் 2000சிசி க்கு மேற்பட்ட டீசல் கார்களை பதிவு செய்யக்கூடாது என்ற தீர்ப்பினை உச்சநீதி மன்றம் அளித்துள்ளது. இதனால் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

mahindra scorpio front

கார் நிறுவனங்களின் முறையீட்டு அடிப்படையில் நடந்த நேற்றைய விசாரனையின் முடிவில் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதனால் மஹிந்திரா டாடா , டொயோட்டா , மெர்சிடிஸ் போன்ற நிறுவனங்களின் 45 கார்கள் டெல்லியில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  • 2000சிசி க்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கு தடை
  • 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களை புதுப்பிக்க கூடாது
  • டெல்லிக்குள் 10 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்கள் ஏப்ரல் 7ந் தேதிக்கு மேல் அனுமதிக்க இயலாது.
  • மத்திய மற்றும் மாநில அரசுகள் டீசல் வாகனங்களை வாங்கக் கூடாது

மேலும் தீர்ப்பீல் யூபர் , ஓலா மற்றும் டாக்சி நிறுவனங்கள் டீசல் வாகனங்களில் இருந்து விடுபட்டு மாற்று எரிபொருளான சிஎன்ஜி க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 6ந் தேதி முதல் இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.

டெல்லி டீலர்களிடம் மட்டும் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள டீசல் வாகனங்கள் ஸ்டாக உள்ளதாம்.

விற்பனையில் அதிகம் பாதிக்கப்படும் கார்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா சைலோ

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா சாங்யாங் ரெக்ஸ்டான்

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா லேண்ட்க்ரூஸர்

டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சுமோ

டாடா ஆரியா

டாடா சஃபாரி

செவர்லே தவேரா

செவர்லே ட்ரெயில்பிளேசர்

ஃபோர்டு என்டெவர்

மிட்ஷ்பிசி பஜெரோ ஸ்போர்ட்

மேலும் பல சொகுசு கார்களான ஆடி , பிஎம்டபிள்யூ , மெர்சிடிஸ் பென்ஸ் , ஜாகுவார் , லேண்ட்ரோவர் போன்ற கார்களை டெல்லி வாசிகள் பதிவு செய்ய இயலாது.