Home Auto News

பட்ஜெட் 2017 : ஆட்டோமொபைல் துறை விபரம்

நமது நாட்டின் மத்திய பட்ஜெட் 2017 ல் பெரும் அளவிலான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை பற்றி பட்ஜெட் 2017 தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய நிதி அமைச்சர் அருன் ஜேட்லி தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. மின்சார கார்கள் மற்றும் மாற்று எரிபொருளுக்கான எந்த திட்டமும் அறிவிப்புகளும் இல்லை. மேலும் முக்கிய அம்சமாக ஆட்டோமொபைல் துறைக்கு கூடுதல் வரி உயர்வு இல்லாமல் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2017 முக்கிய அம்சங்கள்

  • மத்திய பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • 2017 பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்கப்பட உள்ளது.
  • கார் மற்றும் எஸ்யூவி என எந்தவொரு மாடல்களுக்கும் வரி உயர்வு செய்யப்படவில்லை.
  • ஊரக, கிராமப்புற வளர்ச்சி சார்ந்த தொழில்துறைக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு. கடந்த ஆண்டைவிட இது 24 சதவீதம் அதிகமாகும்.
  • ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
  • தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு
  • போக்குவரத்து துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,41,387 கோடி

ஜிஎஸ்டி நடைமுறைக்கு செப்டம்பர் மாதம் ஏதிர்பார்க்கப்படுவதனால் முக்கிய ஆட்டோமொபைல் துறை சார்ந்த அறிவிப்புகள் அதில் வெளியாகும்.