சென்னையில் இயங்கிவரும் பிஎம்டபிள்யூ இந்தியா தொழிற்சாலையில் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 50,000 இலக்கினை கடந்து சாதனை படைத்துள்ளது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் 50000-வது காராக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த மார்ச் 29 , 2007 முதல் சென்னையில் பிஎம்டபிள்யூ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனது. இவற்றில் 8 பிஎம்டபிள்யூ கார்கள் மட்டும் தற்பொழுது இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுகின்றது. அவை பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ , tபிஎம்டபிள்யூ 5 சீரிஸ் , பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் , பிஎம்டபிள்யூ X1, பிஎம்டபிள்யூ X3 மற்றும் பிஎம்டபிள்யூ X5 என 8 மாடல்கள் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றது.

மேக் இன் இந்தியா திட்டத்தில் செயல்பட்டு வரும் பிஎம்டபிள்யூ கார்களின் 50 % பாகங்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுவதனால் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

50000வது கார்கள் உற்பத்தி பற்றி சென்னை பிஎம்டபிள்யூ நிர்வாக இயக்குனர் Dr. Jochen Stallkamp  கூறுகையில் ஒவ்வொரு பிஎம்டபிள்யூ கார்களும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் சர்வதேச அளவிலான தரத்திலே தயாரிக்கப்படுகின்றது. திறன் மிகுந்த பணியாளர்கள் மற்றும் அதிநவீன தொழிற்சாலையினை பெற்றுள்ள பிஎம்படபிள்யூ எதிர்காலத்தில் பல புதிய மைல்கல்லை எட்ட உள்ளது என தெரிவித்தார்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் நாடு முழுவதும் உள்ள முக்கிய 38 மெட்ரோ நகரங்களில் டீலர்களை கொண்டுள்ளது.