மஹிந்திரா & மஹிந்திரா மிக பிரபலமான எஸ்யூவி கார்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று அனைவருக்கும் தெரியும். மேலும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ரேவா எலக்ட்ரிக் நிறுவனத்தை கைப்பற்றிய பின்னர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இந்தியாவினை உருவாக்கி வருவதில் மிகுந்த முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

முதல் கட்டமாக சில வாரங்களுக்கு முன் மஹிந்திரா ரேவா e2o விற்பனைக்கு வந்தது.

அடுத்த வருடத்திற்க்குள்(13-14) மஹிந்திரா வெரிட்டோ செடான் காரினை எலக்ட்ரிக் செடானாக வெளிவருவதனை மஹிந்திரா உறுதிபடுத்தியுள்ளது. எலக்ட்ரிக் வெரிட்டோ 38.9 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

மேலும் இலகுரக டிரக் மேக்சிமோவினை எலக்ட்ரிக் டிரக்யாகவும் கொண்டு வரவுள்ளதாம். தற்பொழுது 50 டிரக்கள் தயார்நிலையில் உள்ளதாம். மேலும் ஜீயோவினை எலக்ட்ரிக் ஆக மாற்ற உள்ளது

இவற்றிக்கு ரூ 150 கோடி முதலீடு செய்துள்ளது.