நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன புகையை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் பிஎஸ் 6 விதிமுறைகளுக்கு ஏற்ற எரிபொருள் ஏப்ரல் 1, 2018 முதல் விற்பனை செய்யப்படும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிஎஸ்-6 எரிபொருள்

தற்போது நாடுமுழுவதும் பிஎஸ் 4 தர மாசு விதிமுறைகளுக்கு ஏற்ற வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வாகன புகையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பிஎஸ் 5 மாசு விதிமுறைகளை தவிர்த்து விட்டு நேரடியாக பாரத் ஸ்டேஜ் 6 வாகனங்கள் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் ஏப்ரல் 1, 2018 முதல் பிஎஸ்6 விதிமுறைகளுக்கு ஏற்ற எரிபொருள் விற்பனை செய்ய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் ஆயில் நிறுவனங்களுடன் இணைந்து அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வறிக்கையின் படி, நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு மாசு டீசல் கார்களில் 80 சதவீதமாக குறைவதுடன், பெட்ரோல் கார்களில் 25 சதவீத மாசு குறைவாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனங்களில் பிஎஸ் 6 விதிமுறைகள் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.