Honda Amaze Ace Edition

ஹோண்டா இந்தியா நிறுவனம், சிறப்பு அமேஸ் ஏஸ் எடிசன் மாடலை ரூ.9.89 லட்சம் விற்பனைக்கு வெளியானது. இரண்டாம் தலைமுறை அமேஸ் காரின் விற்பனை எண்ணிக்கை ஒரு லட்சம் கடந்துள்ளதை முன்னிட்டு சிறப்பு எடிசன் வெளியிடப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியாகி உள்ள சிறப்பு அமேஸ் ஏஸ் எடிஷனில் என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன்

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் என்ஜின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு என்ஜின்களும் கிடைக்க உள்ளது.

ஹோண்டா அமேஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.5 கிமீ (மேனுவல்) , 19.0 கிமீ (ஆட்டோமேட்டிக்) மற்றும் அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.8 கிமீ (மேனுவல்) 23.8 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

Honda Amaze Ace Edition

VX வேரியன்ட் அடிப்படையில் வெளியாகியுள்ள ஏஸ் பதிப்பில் மொத்தமாக 840 கார்கள் மட்டும் வெளியாக உள்ளது. ஏஸ் பதிப்பில் வெளிதோற்றத்தில் ஏஸ் பேட்ஜ் பூட் லிட்டில், கருப்பு நிற வைசர், கருப்ப நிற அலாய் வீல் மற்றும் ஸ்பாய்லர் போன்றவற்றுடன், கருப்ப நிற இருக்கை கவர் கொண்டதாக வந்துள்ளது.

சிவப்பு, சில்வர் மற்றும் வெள்ளை என மொத்தமாக மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்ட 13 மாதங்களில் ஒரு லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது.

Amaze Ace Edition Petrol MT – ரூ. 7,89,200
Amaze Ace Edition Petrol CVT – ரூ. 8,72,200
Amaze Ace Edition Diesel MT – ரூ. 8,99,200
Amaze Ace Edition Diesel CVT – ரூ. 9,72,200

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)