இசுசூ நிறுவனம் தங்கள் புதிய எஸ்யூவிகளை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இசுசூ நிறுவனம் தற்போது MU-X பிரிமியம் எஸ்யூவி மற்றும் V-Cross பிக்அப் டிராக்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஜப்பானை சேர்ந்த ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம், விரைவில் சிறிய அளவிலான எஸ்யூவி-களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய இசுசூ இந்தியா மோட்டார் நிறுவன துணை எம்டி கேன் தகஷிமா, இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது.

எங்கள் நிறுவனம் சிறியளவிலான எஸ்யூவி கள் தயாரிப்பு சர்வதேச அளவில் நடைபெற்று வருகிறது. இருந்த போதும் இந்திய மார்க்கெட் இந்த கார்களை கொண்டு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இருந்தபோதும் இந்திய மார்க்கெட்டில் எஸ்யூவி-களை அறிமுகம் செய்ய ஆலோசித்து வருகிறோம். வாடிக்கையாளர்களின் தேவை, மற்றும் எஸ்யூவி-களுக்கான டிமாண்ட் போன்றவைகளை நிறைவு செய்ய தேவையான நடவடிகைகள் எடுத்து வருகிறோம் என்றார்.

இசுசூ நிறுவனம் தற்போது MU-X பிரிமியம் எஸ்யூவி மற்றும் V-Cross பிக்அப் டிராக்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஜப்பானை சேர்ந்த ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம், விரைவில் சிறிய அளவிலான எஸ்யூவி-களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எஸ்யூவி-க்கள் ஹைபிரிட் பவர்டிரெயின்களுடன் ஜப்பானில் வெளியாகியுள்ளது.

இசுசூ நிறுவனம் இந்தியா காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நுழைந்தால், மார்க்கெட்டில் தற்போது விற்பனையாகி வரும் மாருதி சுஸுகி ப்ர்ஸ்சா, ஹூண்டாய் கிரட்டா கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசுசூ நிறுவனம் சமீபத்தில் தனது புதிய தயாரிப்பான MU-X கார்களை 26.27 லட்ச ரூபாய் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பேஸ் லிப்ட்டாட் MU-X கார்களில், 18-இன்ச் அலாய் வீல், LED டைல்லைட்கள், LED DRLs மற்றும் பாதுகாப்புக்காக ஆறு ஏர்பேக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளான.