jimny suv

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிப்ஸி எஸ்யூவி அல்லது சுசுகி ஜிம்னி எஸ்யூவி காரினை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மாருதி மேற்கொண்டுள்ளது.

தற்போது நான்காம் தலைமுறை ஜிம்னி மாடலாக ஐரோப்பா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மாடலின் அடிப்படையில்தான் இந்தியாவில் ஜிப்ஸி காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

சர்வதேச அளவில் கிடைக்கின்ற மாடலின் அடிப்படையில் தான் இந்த காரினை இந்தியாவில் எதிர்பார்க்கின்றோம். குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த ஆலையில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள ஜிம்னி மாதம் 4,000 முதல் 5,000 கார்கள் வரை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காரின் உற்பத்தி மார்ச் மாதம் மேற்கொள்ளப்படலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஜிப்ஸ, ஆயிரத்திற்கும் குறைவாக மட்டுமே விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த காரணத்தால் நீக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில், நான்காவது தலைமுறை ஜிம்னி சியரா காட்சிக்கு வந்தது. இந்த அரங்கில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு இந்த காரினை மீண்டும் இந்திய சந்தையில் கொண்டு வர மாருதி முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, xl6, எர்டிகா மற்றும் சியாஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இந்த என்ஜின் அதிகபட்சமாக 100 எச்பி பவரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஃப்ரோடு பிரியர்களுக்கு ஏற்ற மாருதி சுசுகி ஜிம்னி சியரா விற்பனைக்கு 2020 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வரும்போது மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு போட்டியாக விளங்கும். மேலும், இந்த காரின் விலை ரூ.10 லட்சத்திற்குள் அமையலாம்.

உதவி- Autocarindia