Renault 5 EV detail

ஜெனிவா மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டுள்ள 400 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற ரெனால்ட் 5 EV மாடலின் அனைத்து நுட்பவிரங்கள் மற்றும் பல்வேறு முக்கிய சிறப்பு அம்சங்களை முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.

1972 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரெனால்ட் 5 காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய 5 இவி கார் 3.92 மீட்டர் நீளம் கொண்டு AmpR Small platform மூலம் (முன்பாக CMF-BEV) தயாரிக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் காரில் 40 kWh or 52 kWh என இரு விதமான பேட்டரி பேக் ஆப்ஷனை பெற்றதாக விற்பனைக்கு முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்பட உள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை கொண்ட இந்த எலக்ட்ரிக் காரில் எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகள் இடம்பெற்று மிகவும் காம்பேக்ட் மாடலாக அமைந்துள்ளது.

இன்டிரியரில் மிக நேர்த்தியான வண்ணங்கள் ஆனது வழங்கப்பட்டு கவர்ச்சிகரமாக அமைந்துள்ள டேஸ்போர்டில் 10 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 10 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

52 kWh பேட்டரி திறன் கொண்ட டாப் வேரியண்டில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 400km என WLTP வரம்பைக் கொண்டுள்ளது. இரண்டாவது 40kwh பேட்டரி பெற்ற மாடல் 300km WLTP வரம்பை பெறுகின்ற குறைந்த விலை 40 kWh திறன் கொண்டுள்ளது.

இந்தியாவில் ரெனால்ட் 5 E-Tech விற்பனைக்கு வெளியிடப்படுமா என்பது குறித்த கேள்விக்கு 2026 ஆம் ஆண்டு வரை வர வாய்ப்பிலை. ஏற்னவே இந்நிறுவனம் க்விட் இவி காரை இந்திய சந்தையில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.