விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – ஜூன் 2017

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை மிக வேகமாக வளர்ந்து வருவதனையே ஜூன் 2017 மாதந்திர  முதல் 10 இருசக்கர வாகன விற்பனை நிலவர முடிவுகளும் உறுதிப்படுத்துகின்றது. குறிப்பாக பஜாஜ் பல்சர் பைக் வரிசை முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடிக்க தவறியுள்ளது.

முதல் 10 இரு சக்கர வாகனங்கள் – ஜூன் 2017

கடந்த சில மாதங்களுடன் ஒப்பீடுகையில் பைக் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டின் விற்பனையும் கனிசமான அளவு குறைந்திருந்தாலும், முதலிடத்தில் வழக்கம் போல ஆக்டிவா ஸ்கூட்டர் 2,34,767 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது.

ads

இரண்டாமிடத்தில் உள்ள ஸ்பிளென்டர் பைக் சுமார்  2,19,103 என்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. 125சிசி சந்தை பிரிவில் உள்ள சிபி ஷைனை வீழ்த்தி கிளாமர் 78,889 பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிடர் ஸ்கூட்டர் மற்றும் எக்ஸ்எல் சூப்பர் போன்றவை முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன், ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் வரிசை 10வது இடத்தில் உள்ளது.

இலகுவாக மாதந்தோறும் 50,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையை பதிவு செய்யும் பல்சர் வரிசை பைக்குகள் 37,503  எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்து 11வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து பல்சர் மட்டுமல்ல பஜாஜ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையே ஜூன் மாதத்தில் மிகுந்த வீழ்ச்சி அடைந்துள்ளது.

Comments