அட்வென்ச்சர் ரக பைக் பிரிவில் வரவுள்ள கேடிஎம் அட்வென்ச்சர் 390 பைக் இந்தியாவிலே தயாரிக்கப்பட உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய 390 அட்வென்ச்சர் பைக் ஆனது டியூக் 390 பைக்கினை அடிப்படையாக கொண்டதாகும்.

390 அட்வென்ச்சர்

நேற்று விற்பனைக்கு வெளியிடப்பட்ட 2017 கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 அறிமுகத்தின் பொழுது புத்தம் புதிய கேடிஎம் அட்வென்ச்சர் ரக மாடல் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டு விரைவில் விற்பனைக்கு வரும் என பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

கேடிஎம் நிறுவனம் மூன்று உயர்ரக அட்வென்ச்சர் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. அவை கேடிஎம் 950 அட்வென்ச்சர் , கேடிஎம் 1190 அட்வென்ச்சர்  மற்றும் கேடிஎம் 1290 அட்வென்ச்சர் போன்றவை ஆகும்.  இந்த பைக்குகளின் வடிவ தாத்பரியத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு வரும் சிறிய ரக அட்வென்ச்சர் மாடல் பல்வேறு கட்ட தீவர சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இதில் 2017 டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சின்  இடம்பெற்றிருக்கும்.

அட்வென்ச்சர் 390 பைக்கில்  44 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 35 நியூட்டன்மீட்டர் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

390 அட்வென்ச்சர் சோதனை ஓட்ட பட உதவி – mcn

அடுத்த சில வாரங்களில் மேம்படுத்தப்பட்ட 2017 கேடிஎம் டியூக்390 விற்பனைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்த இந்த வருடத்தின் மத்தியில் கேடிஎம் அட்வென்ச்சர் 390 பைக் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.