பஜாஜ் க்யூட் என்ற பெயரில் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் க்யூட் இந்திய சந்தைக்கு இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

பஜாஜ் க்யூட்
பஜாஜ் க்யூட்

ஐரோப்பா , ஆப்பரிக்கா , லத்தின் அமெரிக்கா , ஆசியாவில் உள்ள சில நாடுகள் என மொத்தம் 16 நாடுகளுக்கு பஜாஜ் க்யூட் ஏற்றுமதி செய்ய உள்ளது. பஜாஜ் ஆர்இ60 என்ற பெயருக்கு பதிலாக க்யூட் (QUTE) என பெயரிட்டுள்ளது.

ரூ.1.32 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிளில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4ஸ்பார்க் பிளக்குகளை கொண்ட 216சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 19.6 என்எம் ஆகும்.

பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் மைலேஜ் லிட்டருக்கு 35கிமீ ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ ஆகும்.

2.75 மீட்டர் நீளம் கொண்ட க்யூட் குவாட்சைக்கிள் பூட்ஸ்பேஸ் 44 லிட்டர் மற்றும் 4 இருக்கைகளை பெற்றுள்ளது.

ஐரோப்பாவின் குவாட்ரிசைக்கிள் விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் European WVTA (Whole Vehicle Type Approval) தரச்சான்றிதழை க்யூட் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய தயாரிப்பாளரின் முதல் தரச்சான்றிதழ் பெற்ற குவாட்ரிசைக்கிள் என்ற பெருமையை க்யூட் பெறுகின்றது.

400கிலோ எடை கொண்ட க்யூட் குவாட்ரிசைக்கிள் இந்திய சந்தையில் உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு தீர்ப்பினை பொறுத்தே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் விலை ரூ.1.32 லட்சம் ஆகும்.

Bajaj Qute Quadricycle unveiled