ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் ரூ.77,500 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டு நாடு முழுவதும் உள்ள டீலர்கள் வாயிலாக டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எக்ஸ்-பிளேடு

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக் சிபி ஹார்னெட் 160 ஆர் மாடலை விட கூடுதலான நவீனத்துவமான அம்சங்களை பெற்றிருந்தாலும் விலை குறைவாக அமைந்துள்ளது.

முதன்முறையாக 160சிசி சந்தையில் முழுமையான எல்இடி ஹெட்லைட் கொண்ட மாடலாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ்-பிளேட் பைக்கில் ஹெட்லைட் வடிவமைப்பபு மனித முக அமைப்பை பெற்ற ரோபோ வடிவ முகத்தினை போன்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த பைக்கில், சர்வீஸ் இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், இரட்டை குழல் கொண்ட புகைப்போக்கி உட்பட பல்வேறு அம்சங்களுடன் அபாய விளக்குகள், எல்இடி டெயில் விளக்கு ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஹோண்டா CB ஹார்னெட் 160R பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினை பெற உள்ள எக்ஸ-பிளேட் பைக்கில் 13.9hp ஆற்றலை வெளிப்படுத்தும் 162.7சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இதன் டார்க்  13.9Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் 276mm  கொண்ட டிஸ்க் பிரேக் வசதியுடன் பின்புறத்தில் 130mm டிரம் பிரேக் கொண்டதாக 140 கிலோ எடை உள்ள இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்ளளவு பெற்ற டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா டூவீலர் நிறுவனத்தின் CB ஹார்னெட் 160R மாடலுக்கு கீழாக யமஹா FZ V2, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160, சுசூகி ஜிக்ஸெர் மற்றும் பஜாஜ் பல்சர் 160NS ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பிளேடு 160 பைக்கில் கருப்பு, சிவப்பு, நீலம், சில்வர் மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது.

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வசதியுடன் பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டதாக வந்துள்ளது. ஆப்ஷனலாக டிஸ்க் பிரேக் பின்புறத்தில் வழங்கப்படாமல் உள்ளதால் எதிர்காலத்தில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விலை ரூ. 77,500 (எக்ஸ்-ஷோரூம் சென்னை)