Hyundai Aura Front

எக்ஸ்சென்ட் காருக்கு மாற்றாக வரவுள்ள ஹூண்டாய் ஆரா காரை ஜனவரி 21 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில், அதிகாரப்பூர்வ முன்பதிவை இந்நிறுவனம் துவங்கியுள்ளது.

ஹூண்டாய் இணையதளம் அல்லது அருகாமையில் உள்ள இந்நிறுவன டீலர்கள் வாயிலாக ஆரா காருக்கு முன்பதிவை மேற்கொள்ளலாம். முன்பதிவிற்கான கட்டணமாக ரூ.10,000 வசூலிக்கப்படுகின்றது. இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த என்ஜின்களில் மேனுவல், ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்ப்பட உள்ளன. இந்த காரில் மொத்தமாக 12 வேரியண்டுகள் கிடைக்க உள்ளது.

ஆரா காரின் என்ஜின் விபரம்

83 ஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் உற்பத்தி செய்கின்ற1.2 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் சிஎன்ஜி வகையில் வரும்போது 72 ஹெச்பி பவர் மற்றும் 101 என்எம் டார்க் உற்பத்தி செய்யவல்லதாகும்.  இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது. சிஎன்ஜி மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கும்.

75 ஹெச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க்  உற்பத்தி செய்கின்ற 1.2 டீசல் ஈக்கோ டார்க் என்ஜின் பொரத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது.

பிஎஸ்-6 ஆதரவை பெற்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் முன்பாக ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரா செடானில் பொருத்தப்பட்டுள்ளது. 100 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும்  இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஜனவரி 21, 2020 முதல் விற்பனைக்கு ஆரா செடான் கார் கிடைக்க உள்ள நிலையில், இந்த மாடலுக்கு போட்டியாக மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் போன்ற செடான்களுக்கு போட்டியாக விளங்கும். மேலும, ஹூண்டாய் எக்ஸ்சென்ட் பிரைம் வேரியண்ட் டாக்சி சந்தைக்கு தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=kpH06mtSFxk]