இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம், சாங்யாங் ரெக்ஸ்டன் அடிப்படையிலான நான்காவது தலைமுறை ரெக்ஸ்டன் மாடல் மஹிந்திரா ரெக்ஸ்டன் எஸ்யூவி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா ரெக்ஸ்டன்

மஹிந்திராவின் கீழ் செயல்படும் தென்கொரியாவின் சாங்யாங் ரெக்ஸ்டன் மாடலை பின்னணியாக கொண்டு ரீபேட்ஜ் செய்யப்பட்ட மஹிந்திரா ரெக்ஸ்டன் மாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முகப்பில் மஹிந்திரா ரெக்ஸ்டன் எஸ்யூவி முகப்பின் இந்நிறுவனத்தின் பாரம்பரிய கிரிலுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு சிறப்பான அமைப்பினை பெற்றதாக வந்துள்ளது.

5 மற்றும் 7 இருக்கைகளை கொண்டதாக ரெக்ஸ்டன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 7 இருக்கைகளுடன் மஹிந்திரா ரெக்ஸ்டன் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொண்டுள்ள காரில்  9.2 அங்குல ஹெச்டி திரையுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, எல்இடி ஹெட்லைட், 9 காற்றுப்பைகள், ஜிபிஎஸ் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

187hp பவர் மற்றும் 420 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

ஃபோர்டு எண்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் மஹிந்திரா ரெக்ஸ்டன் ரூ.24 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு வெளியாகலாம்.