பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரியான (GST) வரம்பிற்குள் எப்போதும் கொண்டு வரப்படாது என்று செய்திகள் தெரிவிகின்றன.

இதுகுறித்து வெளியான செய்தி ஒன்றில், மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் இந்த முடிவுக்கு ஆதரவாக இருந்தபோது, இந்த முடிவால் தங்களுக்கு பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என்று அச்சம் கொண்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாடு ஒரு வரி என்ற கொள்கையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. இதில் பெட்ரோ-பிராடைக்ட்ஸ் என்று அழைக்கப்படும் பெட்ரோல், டீசல், நேச்சுரல் கியாஸ், குருட் ஆயில் மற்றும் ATF ஆகியவை சேர்க்கப்படவில்லை. கடந்த 4-ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தியது. இந்த முடிவை மத்திய மற்றும் மாநில அரசுகள் எதிர்த்தன.

இதை அரசுகள் எதிர்க்க முக்கிய் காரணம், பெட்ரோல், டீசல் போன்றவை ஜிஎஸ்டி வரம்புக்குள் சேர்க்கப்பட்டால், மதிய அரசின் பெட்ரோல் பிராடைக்டுகளுக்கு விதிக்கப்படும் உள்ளீட்டு வரிக் கடன் சராசரியாக 20,000 ரூபாய் குறையும். இதே போன்று மாநில அரசும் பெரிய வருவாய் இழப்பை சந்திக்கும்.

ஜிஎஸ்டி விதிகளின் படி, சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மொத்த வரி விதிப்பு, 5,12,18 அல்லது 28 சதவிகிதம் என நான்கு ஸ்லாப்களில் மட்டுமே இருக்க வேண்டும், பெட்ரோல், டீசல்களுக்கான தற்போதைய வரி விதிப்பு, 28 சதவிகிதமாக இருக்கிறது. இதனால் இரண்டு அரசுகளும் வருவாய் இழப்பை சந்திக்கும்.

மும்பையில் பெட்ரோலுக்கு, தற்போது அதிகபட்சமாக 39.12 சதவிகிதம் VAT விதிக்கப்படுகிறது. நாடுமுழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி முறையே 45-50 சதவிகிதம் மற்றும் 35-40 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.