Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியா வரவுள்ள ரெனால்ட் டஸ்ட்டர், நிசான் எஸ்யூவி டீசர் வெளியானது

by MR.Durai
27 March 2024, 6:20 pm
in Car News
0
ShareTweetSend

ரெனால்ட்-நிசான் எஸ்யூவி

ரெனால்ட்-நிசான் இந்தியா கூட்டு நிறுவனத்தின் சார்பாக 5 இருக்கை மற்றும் 7 இருக்கை எஸ்யூவி என இரண்டும் இரு நிறுவனங்களின் சார்பாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதை உறுதிப்படுத்தி டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ரெனால்ட் டஸ்ட்டர் 5 இருக்கை எஸ்யூவி மற்றும் 7 இருக்கை எஸ்யூவி, நிசான் சார்பாக 5 இருக்கை மற்றும் 7 இருக்கை எஸ்யூவி என இரண்டும் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.

Renault Duster, Nissan SUV

  • CMF-B பிளாட்ஃபாரம் : உள்நாட்டிலே பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த இரு நிறுவனங்களும் டிசைன் அமைப்பில் முக்கிய வேறுபாடுகளை வழங்க உள்ளது.
  • ரெனால்ட் டஸ்ட்டர் : சில மாதங்களுக்கு முன்பாக சர்வதேச சந்தையில் டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • நிசான் எஸ்யூவி : டெரோனோ என முன்பாக பயன்படுத்தப்பட்ட பெயர் இடம்பெறுமா அல்லது புதிய பெயரில் நிசான் எஸ்யூவி 5 இருக்கை மாடல் வருமா என்பது குறித்தான தகவல் தற்பொழுது இல்லை.

ஏற்கனவே, டேசியா பிராண்டிலும் ரெனால்டிலும் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதே வடிவத்தை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் அமைந்துள்ளது.

நிசான் வெளியிட்டுள்ள டீசரில் எல்இடி லைட் பாருடன் L- வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்று மிக நேர்த்தியான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் டீசர் வெளியாகியுள்ளது. மேலும், 7 இருக்கை எஸ்யூவி மாடலை இரு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளது.

Renault-Nissan

25 ஆண்டுகளாக ரெனால்ட்-நிசான் செயல்பட்டு வருகின்ற கூட்டு முயற்சியில் (RNTBCI – Renault Nissan Technology Business Centre India) கூட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் இந்திய தயாரிப்புகள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களுக்கும் மேம்பாடுகளை வழங்கி வருகின்றது.

குறிப்பாக, ரெனால்ட் 5, Renault Scenic, ரெனால்ட் ஸ்பிரிங், நிசான் X-Trail, மற்றும் நிசான் லீஃப் உள்ளிட்ட மாடல்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Related Motor News

புதிய டிசைனுடன் வரவுள்ள 2025 ரெனால்ட் ட்ரைபர் டீசர் வெளியானது

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

எலக்ட்ரிக் கார் உட்பட 5 கார்களை வெளியிடும் ரெனால்ட் இந்தியா.!

எம்பிவி, எஸ்யூவி என இரண்டு கார்களை வெளியிடும் நிசான்

சென்னையில் புதிய ’R ஸ்டோர் கான்செப்டில் முதல் டீலரை துவங்கிய ரெனால்ட்

Tags: NissanRenaultrenault duster
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

maruti suzuki victoris launched

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan