Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் முன்பதிவு தொடங்கியது

by MR.Durai
27 October 2018, 7:41 am
in Bike News
0
ShareTweetSend

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நீண்ட மோட்டார்சைக்கிள் பாரம்பரியமிக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின், புதிய 650 சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் என அழைக்கப்படுகின்ற இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 என இரு மாடல்களுக்கு முன்பதிவு நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.

2017 இ.ஐ.சி.எம்.ஏ அரங்கில் வெளியிடப்பட்ட கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 என இரண்டிலும் புத்தம் புதிய 648 சிசி திறன் பெற்ற எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

வகை 648 cc, SOHC, air-cooled, parallel-twin
பவர் 47 bhp at 7,100 rpm
டார்க் 52 Nm at 4,000 rpm
Bore x Stroke 78 mm x 67.8 mm
Compression Ratio 9.5:1
கியர்பாக்ஸ் 6 வேக மேனுவல்
எரிபொருள் வகை ப்யூவல் இன்ஜெக்‌ஷன்
இக்னிஷன் டிஜிட்டல் ஸ்பார்க் இக்னிஷன் – TCI

நாடு முழுவதும் உள்ள என்ஃபீல்ட் டீலர்கள் வாயிலாக ரூ. 5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகின்ற 2018 ரைடர் மேனியா அரங்கில் இரு மாடல்களின் விலை விபரம் வெளியாக வாய்ப்புள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் விலை ரூ. 3.50 லட்சம் (ஆன்ரோடு) அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

Related Motor News

கஸ்டமைஸ்டு கான்டினென்டினல் ஜிடி 650 மாடலை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல்

2023 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650, கான்டினென்டினல் ஜிடி 650 விற்பனைக்கு வந்தது

புதிய நிறங்களில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650, இன்டர்செப்டர் 650 அறிமுகம்

ஐரோப்பாவில் ராயல் என்ஃபீல்டு 650சிசி லிமிடெட் எடிஷன் அறிமுகம்

ஃபேரிங் ஸ்டைலில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 சோதனை ஓட்டம்

Tags: Royal Enfield 650 TwinsRoyal Enfield Continental GT 650Royal Enfield Interceptor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tvs ntorq 125 race xp blaze blue

புதிய நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் XP வெளியானது

bmw-g-310-rr-teased

டீசர் மூலம் புதிய G 310 RR அறிமுத்தை உறுதி செய்த பிஎம்டபிள்யூ

12.5 கோடி இரு சக்கர வாகனங்களை விற்ற ஹீரோ மோட்டோகார்ப்

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan